மூல நட்சத்திரத்தில் பிறந்தா மாமனார் இருக்க கூடாதா..? இதன் உண்மை என்ன ....???

நம்மில், பலர் மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இருப்பர். குறிப்பாக பெண்களுக்கு மூல நட்சத்திரம் என்றால், நம் முன்னோர்கள் உடனே சொல்வார்கள், அய்யய்யோ மூல நட்சத்திரமா....? மாமனாருக்கு ஆகாது ......வேறு வரனை பார்க்கலாம் என நாம் பேசுவதை பார்த்து இருப்போம்.

 ஆனால் அப்படி ஒன்றும் இல்லை என்பது தான் உண்மை .......

 அதாவது, 27 நட்சத்திரத்தில், 19 இடத்தில் உள்ளது மூல நட்சத்திரம்

 இந்த நட்சத்திரம் அஞ்சநேயரின் அவதார நட்சத்திரமாகும்.

 இவர்கள் தெய்வ வழிபாடு மேற்கொள்பவர்கள்.

சரி......மாமனாருக்கு ஆகுமா?.... ஆகாதா? என்பதுதான் கேள்வி :

 மூல நட்சத்திர பெண்கள், சிறு வயதிலிருந்தே அதிக அறிவு கூர்மை உடையவர்களாக இருப்பார்கள். இவர்கள் திருமணம் முடிந்த பின்பு, புகுந்த வீட்டுக்கு செல்லும் போது, அங்கு சில நல்ல யோசனைகளை, அந்த வீட்டில் உள்ள அனைவருக்கும் வழங்கும் எண்ணம் கொண்டவர்கள் தான் மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்.....

 குறிப்பாக , மாமனாருக்கு நல்ல நல்ல , புத்திசாலிதனமான யோசனைகளை வழங்கி அனைவரின் கவனத்தை ஈர்க்கும் மருமகளாகத்தான் அப்பெண் விளங்குவார் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.....

இதனால் காலப்போக்கில், மாமனாருக்கு ஈகோ வர ஆரம்பிக்கும், இப்ப வந்த சின்ன பொண்ணு நமக்கு யோசனைகள் வழங்குவதா என நினைப்பார் .... இந்த ஒரே காரணத்தினால் மட்டும் தான் ,,,,,” மாமனாருக்கு ஆகாது “ என்று சொல்லி இருக்கிறார்கள் .........இப்பவாது நம்புங்க,,,,,,,,....!!!