monkey drunk the alcohol in bengalore bar
சரக்கடித்து ஆட்டம் போட்ட குரங்கு..! பெங்களூரு பாரில் நடந்த சுவாரஸ்யம்..!
பெங்களூரு, பனஸ்வாடியில் உள்ள ஒரு பாரில் திடீரென உள்நுழைந்த குரங்கு ஒன்று அங்குள்ள பாட்டிலை கீழே தள்ளி மது அருந்தியது.
பின்னர் மது போதையில் அந்த பக்கம் இந்த பக்கம் என ஓடி உள்ளது. இதனை கண்ட மற்றவர்கள் சற்று ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்தனர்.

அப்போது ஒரு கட்டத்தில் அமைதியாக அமர்ந்து அந்த குரங்கிடம்,யாரோ ஒருவர் வாழைப்பழம் கொண்டு சென்று கொடுத்தாலும் அதற்கும் கோபப்படுகிறது அந்த குரங்கு.

இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் குரங்கு மது அருந்தும் காட்சி தான் அனைவரையும் வைரலாக ஈர்த்துள்ளது .
ஆனாலும் இதை பார்க்கும் போது குடித்து விட்டு கோமாளி போன்று ஆட்டம் போடும் மனிதர்களை விட,குரங்கு குறைவாக தான் ஆட்டம் போட்டுள்ளது என்று சமூக வலைத்தளங்களில் மக்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
