அமைச்சர் ஜெயக்குமார் குரலில் பேசிய "முகமது ரஃபீக்"..! பல லட்சத்தை ஆட்டைய போட்டதன் பகீர் பின்னணி..! 

கிண்டியில் சேர்ந்த துரைசாமி என்பவரிடம் அமைச்சர் ஜெயக்குமார் குரலில் பேசி பண மோசடியில் ஈடுபட்ட முகமது ரபீக் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த மார்ச் 3ஆம் தேதியன்று துரைசாமி என்பவருக்கு ஒரு போன் கால் வந்துள்ளது. துரைசாமி  ஒரு தனியார் நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரியாக பணி புரிந்து வந்துள்ளார். இந்த நிலையில் அமைச்சர் ஜெயக்குமார் குரலில் "அம்மா பிறந்தநாளுக்கு பல நலத்திட்ட உதவிகள் வழங்கி வருவதால் பணம் தேவைப்படுகிறது. நீங்கள் தொழிலதிபர் என்பதால் 80 ஆயிரம் ரூபாய் கொடுங்கள் என கேட்டு, பின்னர் 30 ஆயிரம் ரூபாய் கொடுக்க ஒப்புக்கொண்டுள்ளார்.மீண்டும் இந்த நபருக்குஅழைத்த போது ட்ரூகாலரில் ஜெயக்குமார் என்று வந்துள்ளது. 

அதன் காரணமாக அமைச்சர் தான் என நம்பிய அவர் அக்கவுண்ட் நம்பரை கேட்டுள்ளார்.பின்னர் துரைசாமிக்கு பணம் செலுத்த வேண்டிய வங்கிக்கணக்கு அனுப்பியுள்ளார் முகமது ரபீக். அதன்படி அக்கவுண்ட் நம்பரை சோதனை செய்யும்போது முகமது ரபிக் என்ற பெயர் இருந்துள்ளது. அதன் பிறகு இதுகுறித்து நேரடியாகவே அமைச்சர் அலுவலகத்திற்கு சென்று விசாரித்து உள்ளார் துரைசாமி. ஆனால் அமைச்சர் அலுவலகம் இது போன்று யாரையும் தாங்கள்அனுப்பவில்லை என தெரிவித்து உள்ளனர்.

பின்னர்  கிண்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். பின்னர் இதுகுறித்து விசாரணை செய்த சப்-இன்ஸ்பெக்டர் சரபோஜி ராவ் தண்டையார்பேட்டையில் பதுங்கி இருந்த முகமது ரஃபிக் என்பவரை அலேக்கா தூக்கியது. இவரிடம் மேற்கொண்ட விசாரணையில் அமைச்சர் குரலில் பல நபரிடம் பேசி பண மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது 

இதேபோன்று மற்ற அமைச்சர்களின் பெயரை சொல்லியும் சிறுசிறு தொழிலதிபர்கள் வியாபாரிகளிடம் பணம் பெற்று வருவதை வழக்கமாக வைத்துள்ளார் ரஃபிக். இது தவிர கோயம்புத்தூர் திருப்பூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இவர் மீது பல்வேறு குற்ற சம்பவங்களில் 15 வழக்குகள் இருப்பதும் தெரியவந்து உள்ளது. மேலும், இதுபோன்று எத்தனை ஆண்டுகளாக இவர் செய்து வந்துள்ளார்? எந்தெந்த அமைச்சர்களின் பெயரை சொல்லி யார் யாரிடம் பணத்தை வசூல் செய்துள்ளார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.