மோடி முகத்தில் களைப்பு..! ஓய்வே எடுக்காமல் 3 மணி நேரம் என்ன செய்தார் தெரியுமா..? 

வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக அமைந்துள்ள பிரதமர் மோடி சீன அதிபர் ஜின்பிங் சந்தித்த நிகழ்வு சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற்றது. இதற்காக இன்று காலை சென்னை விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் நரேந்திர மோடி அங்கிருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் கோவளத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதிக்கு சென்றார்.

அங்கு சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு பின்னர் மாலை 4 மணி அளவில் அங்கிருந்து புறப்பட்டு மாமல்லபுரம் சென்றடைந்தார். அதேவேளையில் மாலை 4 மணி அளவில் சீன அதிபர் கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இருந்து கிளம்பி மாமல்லபுரம் சென்றடைந்தார். அவரை வரவேற்பதற்காக சரியான நேரத்தில் பிரதமர் மோடியும் மாமல்லபுரம் சென்று இருந்தார். அப்போது அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக வேட்டி சட்டை தோளில் துண்டு என அசத்தலாக இறங்கி சென்று சீன அதிபரை வரவேற்றார்.

இந்த நிலையில் காலையிலேயே சென்னை வந்த பிரதமர் மோடி ஓய்வு எடுக்கும் நேரத்தில் ஓய்வெடுக்காமல் மாமல்லபுரம் குறித்த பல்வேறு விஷயங்களை தெரிந்துகொண்டுள்ளர். குறிப்பாக ஒவ்வொரு சிற்பம், அதனுடைய முக்கியத்துவம், பல சிறப்பம்சங்கள் என அனைத்தையும் புகைப்படம் வைத்தே அதை பற்றி விவரங்களை படித்து உள்ளார். சிறிது நேரம் கூட ஓய்வு எடுக்காமல் மாமல்லபுரம் குறித்த அனைத்து சிறப்பு விஷயங்களையும் தெரிந்து கொண்டு கம்பீரமாக மாமல்லபுரத்திற்கு புறப்பட்டு வந்துள்ளார்.

பின்னர் இரு பெரும் தலைவர்களும் சந்தித்துக் கொண்ட பின் மாமல்லபுரத்தின் சிறப்பினை மிக தெளிவாக சீன அதிபருக்கு எடுத்துரைத்த காட்சி காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது. மாமல்லபுரத்தைப் பற்றி இவருக்கு இவ்வளவு விஷயம் தெரியுமா என சமூக வலைதளத்தில் பலரும் கேள்வி எழுப்பினர். அதற்கான பதில் உண்மையில் மாமல்லபுரத்தைப் பற்றி அருமையாக தெரிந்து கொண்டு முழு விவரத்தையும் தெள்ளத்தெளிவாக சீன அதிபருக்கு எடுத்துரைத்தார் மோடி என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாகத்தான் பிரதமர் மோடி தற்போது சற்று களைப்பாக இருப்பதும் தோற்றத்தில் உணரமுடிகிறது.