வரும் நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் மத்தியில் ஆட்சியை பிடிக்குமா பாஜக என்ற ஆவல் அனைவரும் மத்தியிலும் நிலவி வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி, வரும் நாடாளுமன்ற தேர்தலில் முதல் முறையாக ஓட்டு போட உள்ள இளைஞர்களை வரவேற்பதாக ஏற்கனவே தெரிவித்து இருந்தார். 

மேலும் இளைஞர்கள் மத்தியில் நல்ல செல்வாக்கை மோடி பெற்று உள்ளார் என பரவலான கருத்து நிலவி வருகிறது. இந்த நிலையில் மோடிக்கு ஆதரவாக,"மீண்டும் மோடி வேண்டும் மோடி" என்ற பிரச்சார உரையுடன் பல்வேறு நலத்திட்ட உதவிகளும் மக்கள் மத்தியில் சென்று உள்ளது.

டிஜிட்டல் இந்தியாவில் மோடி பெரும் புரட்சியை உருவாக்கி உள்ளார் என்றே கூற முடியும். அந்த அளவிற்கு தொழிநுட்ப வளர்ச்சியும் அதிகரித்து உள்ளது என கூறலாம். இந்த நிலையில் பெண்கள் மத்தியிலும் மோடி பெயர் அதிகமாக உச்சரிக்கப்படுகிறது

மீண்டும் மோடி ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக பெண்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக மோடி முகம் பதியப்பட்ட சேலையை உருவாக்கி உள்ளனர் வட இந்திய வியாபாரிகள். இந்த சேலை குறித்த செய்தி தற்போது வைரலாக மாறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மோடி உருவம் பதிந்துள்ளதால் இந்த சேலையை ஆர்வமாக பல பெண்கள் வாங்கி செல்கின்றனர்.