உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனாவிற்கு எதிரான புரட்சியில் பிரதமர் மோடி எடுக்கும் ஓவ்வொரு முடிவையும் பார்த்து உலக நாடுகள் அசந்து போயுள்ளது. இந்த நிலையில் அமெரிக்க வெள்ளை மாளிகை முன்னாள் அதிகாரி ஸ்டீபன் பனான், தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் மோடி உலக  நாடுகளுக்கு சூப்பர்  ஹீரோ என தெரிவித்துள்ளார்.

கொரோனாவை பயன்படுத்தி இந்தியாவில் உள்ள பெருநிறுவனங்களை விலைக்கு வாங்கும் சீனாவின் முயற்சியை முறியடிக்கும் விதமாக அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கையில் மத்திய அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.


கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலக நாடுகள் முழுவதும் பொருளாதார ரீதியில் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. இந்நிலையில், பங்கு சந்தையில் இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களின் பங்கு மதிப்பும் வேகமாக சரிந்து வருகிறது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களின் பங்குகளை வாங்கி அவற்றை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முயற்சித்து வருகின்றன. குறிப்பாக சீனாவின் மத்திய வங்கி கடந்த மார்ச் மாதத்திற்குள் இந்தியாவின் ஹெச்டிஎப்சி நிறுவனத்தின் 1.01 சதவிகித பங்குகளை வாங்கியுள்ளது. 

சீனாவின் இந்த நடவடிக்கையால் இந்திய பெரு நிறுவனங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கொரோனாவை பயன்படுத்தி இந்திய நிறுவனங்களில் ஆதிக்கம் செலுத்த சீனா முயற்சிப்பதாகவும் அதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார். இந்நிலையில், இந்திய நிறுவனங்களின் பங்குகளில் வெளிநாட்டு நிறுவனங்கள் நேரடியாக முதலீடு செய்யவேண்டும் என்றால் மத்திய அரசிடம் அனுமதி முக்கியம் என்ற புதிய நடைமுறை அமல்படுத்தியுள்ளது. சீனாவை குறிவைத்து அமல்படுத்தப்பட்டுள்ள இந்த நடைமுறையின் படி இந்தியாவுடன் எல்லைகளை பகிர்ந்துள்ள நாடுகள் இந்திய நிறுவன பங்குகளில் முதலீடு செய்ய வேண்டும் என்றால் மத்திய அரசிடம் உரிய அனுமதி பெற வேண்டும்.

அந்நிய முதலீட்டு நடைமுறையில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த திருத்தம் வெளிநாட்டு நிறுவனங்கள் குறிப்பாக சீனா இந்திய நிறுவனங்களில் முதலீடு செய்து பங்குகளை வாங்கி தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர நினைத்த திட்டம் முறியடிக்கப்பட்டது. பிரதமர் தலைமையிலான மத்திய அரசு எடுத்த இந்த  அதிரடி நடவடிக்கை உலக நாடுகளை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்து உள்ளது.இது குறித்து, அமெரிக்க வெள்ளை மாளிகை முன்னாள் அதிகாரி ஸ்டீபன் பனான் தனியார்  தொலைகாட்டிச்சிக்கு அளித்தபேட்டியில்,

"மோடி ஓர் சூப்பர் ஹீரோ. நெருக்கடியான காலகட்டத்தில் மற்ற நாடுகளின் ஆதிக்கம் தன் நாட்டில் இருக்க கூடாது என்பதற்காக சரியான முடிவை சரியான நேரத்தில் எடுத்துள்ளார். இதை தான் அமெரிக்கா மற்றும்  ஐரோப்பிய நாடுகளிலும் செய்ய வேண்டும் என நான் நினைக்கிறன். அவர் எடுக்க கூடிய ஓவ்வொரு முடிவும்  மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. நாட்டுக்கு எது நல்லது..? எந்த நேரத்தில் எந்த முடிவு எடுக்க வேண்டும் என சரியாக  தீர்மானித்து உள்ளார். தொலைதூர நோக்கில் அவர் எடுக்கும் முடிவு நாட்டுக்கு மிகவும் பாதுகாப்பானது. அதனால் தான் அவரை எனக்கு மிகவும் பிடிக்கிறது. அவருடைய செயல்பாட்டை பார்த்து நான்  இம்ப்ரெஸ் ஆகிவிட்டேன் என தெரிவித்து உள்ளார்.

ஆனாலும், மோடியின் இந்த முடிவுக்கு உலக நாடுகள் அதிர்ச்சி அடைந்து உள்ளது. இதனால் இந்தியாவில்  பிசினஸ் செய்யும் மற்ற நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கும்...இந்தியாவும் இப்படியொரு இக்கட்டான
சூழ்நிலையில் பொருளாதார சரிவை சந்திக்கும் என்ற கேள்விக்கு....

 "ஆமாம். இருந்தாலும் இந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இப்படி ஒரு முடிவு எடுத்தது தான் சிறந்தது.இந்த முடிவால் இன்று கசப்பாக இருந்தாலும் இன்னும் சில ஆண்டுகளில் நாட்டுக்கு மிகவும் நன்மை கொடுக்கும்.. நாடு மக்களும் பயனடைவார்கள்.. இந்திய பொருளாதாரமும் பாதிக்காது.. என தெரிவித்து மோடி ஒரு சூப்பர்  ஹீரோ என குறிப்பிட்டு உள்ளார்