வரும் ஜூலை மாதம் முதல், புதிதாக மொபைல் எண் பெறுபவர்கள் அனைவருக்கும் 10லிருந்து 13 எண்ணாக மாறுகிறது மொபைல் எண் என்கிற செய்தி வலைத்தளங்களில் தீயாகப் பரவியது.

இது குறித்த வெளியான தகவலில் கூடுதல் பாதுகாப்பை வழங்கும் நோக்கில்,வாடிக்கையாளர்களுக்கு 13 இலக்க எண்களை வழங்கும்படி அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களையும்,தொலை தொடர்புத்துறை அறிவுறுத்தி உள்ளது என்றும் அதன்படி  ஜூலை 1 முதல் மொபைல் எண் வாங்குவோருக்கு ஜூலை 1 முதல் 13 இலக்க எண்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப் பட்டிருந்தது.

இந்த தகவல் குறித்து தொலைத்தொடர்பு ஆணையம் வெளியிட்டுள்ள தகவில் M2M வாடிகையாளர்களுக்கு மட்டுமே 13 எண்கள் வழங்கப்பட உள்ளதாகவும் மற்ற வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் 10 எண்கள் தான் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

மேலும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும்  13 எண்கள் வழங்கப்பட உள்ளதாக பரவிவரும் தகவலை வாடிக்கையாளர்கள் யாரும் நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.