காய்கறி விற்கும் எம்.எல்.ஏ-வின் மனைவி...! யார் அந்த எம்.எல்.ஏ தெரியுமா..? 

மூன்று முறை எம்எல்ஏவாக இருந்த ஒரு நபரின் மனைவி இன்றளவும் காய்கறி விற்று வரும் சம்பவம் அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ளது பட்காகோன் தொகுதியில் 3 முறை தேர்தலை சந்தித்து எம்.எல்.ஏ வாக பதவி வகித்தவர் லோக்நாத்மேக்டோ. இவருடைய மனைவி பெயர் மவுலினி தேவி, இவரை ஆரம்ப காலக்கட்டத்தில் இருந்தே காய்கறி விற்கும் தொழிலை செய்து வந்தார். கடந்த 1995, 2000, 2004 ஆகிய ஆண்டுகளில் எம்.எல்.ஏவாக பதவி வகித்தவர். இவர் பதவியில் இருக்கும் போது பண ஆசை இல்லாமல் நேர்மையான முறையில் மக்களுக்காக சேவை செய்து வந்தவர். இவருடைய நேர்மையை பாராட்டி விருதும் வழங்கப்பட்டு உள்ளது. 

இவருடைய மனைவி ஆரம்ப காலகட்டத்தில் இருந்து காய்கறி விற்பனை செய்து வந்தார். இன்றும் அதே வேலையை செய்து வருகிறார். மேலும் லோக்நாத்மேக்டோ எம்எல்ஏவாக இருக்கும்போது அவருடைய சம்பளத்தை அப்பகுதி ஏழை எளிய மக்களுக்கு பயன்படுத்தியுள்ளார். ஆதரவு இல்லாதவர்களுக்கு அவருடைய சொந்தப் பணத்தில் திருமணமும் செய்து வைத்து மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்றவர். அதுமட்டுமல்லாமல் கடந்த 2005 ஆம் ஆண்டு சிறந்த எம்எல்ஏவுமான விருதையும் அவருக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து லோக்நாத்மேக்டோ தெரிவிக்கும் போது, "தனது மனைவி காய்கறி விற்பது எனக்கு பெருமையான விஷயம் தான்.. அவர் குடும்பத்தை கவனித்துக்கொள்கிறார். நான் மக்களுக்கு சேவை செய்கிறேன் என தெரிவித்து உள்ளார்.