உலகில் திறமைக்கு பஞ்சமில்லை. டிக் டாக், இன்ஸ்டா போன்ற சமூக ஊடகங்கள் வந்த பின்னர் மக்கள் தங்களது திறமையை வெளிக் கொண்டு வருவதற்கு ஒரு வாய்ப்பாக அமைந்து இருக்கிறது. 

ரீல்களும் அதேபோல் வாய்ப்பை வழங்கி வருகிறது. மக்களின் இந்த திறமைகள் காலத்திற்கும் அழிக்கப்படாமல் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு வீடியோவை பாலிவுட் நடிகர் வித்யுத் ஜம்வால் பதிவிட்டுள்ளார். மைக்கேல் ஜாக்சனின் பேய் வீடியோவை போன்று அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மிசோரமில் உள்ள ஒரு கிராமத்தில் அந்த இளைஞனுக்குள் மைக்கேல் ஜாக்சனின் ஆவி நுழைந்துவிட்டதோ என்று கேட்கும் அளவிற்கு அந்த வீடியோ உள்ளது. அந்த இளைஞனின் அற்புதமான நடனம் நம்மை கண் இமை இமைக்காமல் பார்க்க வைக்கிறது. நிஜத்திலும் மைக்கேல் ஜாக்சனின் ஆவிதான் புகுந்து விட்டதோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. 

View post on Instagram

ஞாயிற்றுக்கிழமை இந்த வீடியோவைப் பகிர்ந்த வித்யுத் ஜம்வால், 'சண்டே என்டர்டெயின்மென்ட், இது மிசோரமைச் சேர்ந்த மைக்கேல் ஜாக்சனின் ஆவி'' என்று பதிவிட்டுள்ளார். வைரலான வீடியோவில், மைக்கேல் ஜாக்சனின் இசைக்கு ஒருவர் பிரேக் டான்ஸ் ஸ்டெப்களைக் காட்டுகிறார். சமூக ஊடக பயனீட்டாளர்களை மிரள வைக்கிறார். அந்த நபரை மக்கள் மிகவும் பாராட்டி வருகின்றனர்.