உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவிற்கு இதுவரை தடுப்பூசி மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில்  சற்று ஆறுதல் தரும் விஷயமாக அமைந்துள்ளது பிளாஸ்மா சிகிச்சை முறைஇதுவரை 209 கும் மேற்பட்ட உலக நாடுகள் அனைத்திலு ம் கொரோனா பாதிப்பு படுவேகமாக பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஒரு நிலையில் இதற்கான தடுப்பு மருந்தை தயாரிக்கும் பணியில் பல்வேறு முன்னணி நாடுகள் களமிறங்கி உள்ளனர். இந்த நிலையில் மனிதர்களுக்கு கொடுத்து சோதனை செய்யும் அளவுக்கு மூன்று மருந்துகள் தற்போது தயாராகி உள்ளது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேவேளையில் 70க்கும் மேற்பட்ட மருந்துகளும் ஆராய்ச்சியில் உள்ளது.


இந்த ஒரு நிலையில் சற்று ஆறுதல் தரும் செய்தியாக கொரோனாவிற்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்க மருத்துவ ஆராய்ச்சி கழகத்தில் அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

 "பிளாஸ்மா" சிகிச்சை முறை

அதாவது ரத்தத்தில் உள்ள மூலக்கூறு தான் "பிளாஸ்மா". கொரோனாவால் குணம் அடைந்தவர்களின் பிளாஸ்மாவை பிளாஸ்மாவில் "ஆன்டிபாடி" என அழைக்கப்படும் நோய் எதிர்ப்பு தன்மை கொண்ட அணுக்கள் கண்டிப்பாக இருக்கும். இந்த நோய் எதிர்ப்புத்தன்மை கொண்ட ஆன்டிபாடி பிளாஸ்மாவை பாதிக்கப்பட்டவரின் உடலில் செலுத்தினால், அவர் குணமடைய வாய்ப்புள்ளது என கணிக்கப்பட்டுள்ளது. எனவே மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் இதற்கு அனுமதி கொடுத்தால் தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சை மேற்கொள்ளப்படும் என்றும் அதற்கான கருவிகள் அரசு மருத்துவமனைகளுக்கு விரைவில் வழங்கப்பட உள்ளது எனவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார்.
 
பல நாடுகள் கொரோனாவிற்கு தடுப்பு மருந்து கண்டுப்பிடிக்க தீவிரமாக ஆராய்ச்சியில் ஈடுபட்டு உள்ள நிலையில், இன்று வரை அதற்கான சரியான மருந்து கண்டுப்பிடிப்பதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. இப்படி ஒரு நிலையில் பிளாஸ்மா சிகிச்சைக்கு அனுமதி கொடுத்து அதில் வெற்றி கண்டால், மிக பெரிய சாதனையாக  அமையும். இதே பிளாஸ்மா சிகிச்சை முறைக்கு ஏற்கனவே கேரள அரசு மருத்துவ ஆராய்ச்சி கழகத்திடம்  அனுமதி கோரி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.