தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி லண்டனுக்கு சென்று நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். கடந்த மூன்று நாட்களாகவே எடப்பாடி அணிந்துள்ள கோட் சூட் பற்றின பேச்சு தான்  அதிகம் மக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது 

இந்தநிலையில் 7 நாள் சுற்றுப்பயணமாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பின்லாந்து நாட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் பின்லாந்தில் மேற்கொள்ளப்படும் கல்வி முறைகள் என்ன? பள்ளிகளின் தரம் மற்றும் கற்பிக்கும் முறை, பாடத்திட்டங்கள், மாணவர்களின் திறமை என அனைத்தையும் கூர்ந்து கவனித்து வருகிறார் அமைச்சர் செங்கோட்டையன்.

கடந்த இரண்டு நாட்களாக லண்டனில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோட் சூட் போட்டுக் கொண்டு பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வரும் செய்தியை பார்க்க முடிந்தது. அதே வேளையில் தற்போது பின்லாந்து நாட்டிற்கு சென்று அங்குள்ள பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு வரும் செங்கோட்டையன் கோட் சூட் அணிந்து பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்று வரும் காட்சியையும்  பார்க்க முடிகிறது