பள்ளி மாணவர்களே..! ஒரு பீரியட் முடிந்தால் 10 நிமிடம் ரிலாக்ஸ் டைம்..! அமைச்சர் அதிரடி..! 

பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக செங்கோட்டையன் பொறுப்பேற்ற பிறகு பல்வேறு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார். அதில் குறிப்பாக மாணவர்களுக்கு பயோமெட்ரிக் முறையில் வருகை பதிவேடு. சீருடையில் மாற்றம். புதிய பாட புத்தகம். நீட் தேர்வு மையங்கள் ஆங்கில திறனை வளர்ப்பதற்கு வெளிநாடுகளில் இருந்து ஆங்கில பேராசிரியர்களை வரவைப்பது. பொதுத்தேர்வு குறித்த முக்கிய முடிவு என சொல்லிக் கொண்டே போகலாம்.

இந்த நிலையில் மாணவர்களின் கல்வியை கருத்தில் கொண்டு, அதேவேளையில் உடல் நலத்திலும் அக்கறை  செலுத்தும் வகையில் ஓர் அறிவிப்பை வெளியிட்டு உள்ளார் அமைச்சர் செங்கோட்டையன். அதன்படி கேரளாவைப் போலவே தமிழகத்திலும் அனைத்து பள்ளிகளில் ஒவ்வொரு வகுப்பு முடிந்ததும் மாணவர்கள் தண்ணீர் குடிக்க 10 நிமிடங்கள் ஒதுக்கப்பட ஒதுக்கப்படும்.

அதற்கான அரசாணை விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார். இன்று நவம்பர் 14 குழந்தைகள் தினம் என்பதால் சாந்தோமில் உள்ள ஒரு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்றபோது இந்த விவரத்தை தெரிவித்து இருந்தார். மேலும் வரும் காலங்களிலும்  சிஏ படிப்புக்கு பெரும் வரவேற்பு இருப்பதால் இப்போதே பள்ளி படிப்பின் போது சிஏ வகுப்புக்கு தேவையான சிலபஸ் கொண்டுவரப்படும் எனவும் தெரிவித்து உள்ளார்