500 ஆடிட்டர்கள் ரெடி..! அரசு பள்ளி மாணவர்கள் ரெடியா இருங்க..! அடுத்த மாஸ் காண்பிக்கும்  செங்கோட்டையன்..! 

பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக செங்கோட்டையன் பொறுப்பேற்ற பிறகு மாணவர்களின் நலன் கருதி பல்வேறு அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறார்.

அந்த வகையில் சீருடையில் மாற்றம், இலவச நீட் தேர்வு பயிற்சி மையங்கள், பயோமெட்ரிக் முறையில் வருகை பதிவேடு, புதிய பாடப்புத்தகம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய முடிவுகளை எடுத்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது இந்தியா முழுக்க அமலில் உள்ள ஜிஎஸ்டி முறை பெரும் முக்கியத்துவம் வாய்ந்து உள்ளது என்பதால் இன்றைய இளைஞர்களுக்கு பெரும் வேலை வாய்ப்பாக இருக்கக்கூடியதும் பெரும் சவாலாக இருக்கக்கூடியதும் ஆடிட்டர் வேலை என்றே சொல்லலாம். இந்த  துறையில் அதிக வேலைவாய்ப்பு கொட்டிக் கிடக்கிறது என்ற ஒரு விஷயத்தை நாம் இங்கு புரிந்து கொள்ளுதல் வேண்டும். 

இதன் காரணமாக இப்போதே மாணவர்களை ஆடிட்டர் படிப்பு படிப்பதற்கு தயார்படுத்த வேண்டும் என்பதற்காக பிளஸ்2 தேர்வு முடிந்தவுடன் பட்டய கணக்காளர், அதாவது ஆடிட்டர் சிஏ பணிக்கான பயிற்சி அளிப்பதற்காக நடவடிக்கை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் இதற்காக 500 ஆடிட்டர்கள் தயார் நிலையில் உள்ளதாகவும், தமிழகம் முழுவதும் பயிற்சிக்கான மாணவர்களை தேர்வு செய்வதற்கு அரசு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இங்கு நாம் உற்று நோக்க வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், இன்றைய இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் தவித்து வருவதாகவும் இன்னொரு பக்கம் பல்லாயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் குவிந்து கிடக்கிறது என்பதையும் உணர்தல் வேண்டும். ஆனால் எந்த துறையில் எந்த பிரிவு படிக்க வேண்டும் என்பதில் இருக்கிறது நாம் எதிர்பார்க்கும் ஒரு விஷயம்