ஆட்டம் காட்டும் செங்கோட்டையன்..! பின்லாந்தில் பட்டைய கிளப்பியும் அதிரடி அமைச்சர்..! 

பின்லாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அங்கு தொடர்ந்து ஆய்வினை மேற்கொண்டு வருகிறார்.

பின்லாந்து நாட்டிற்கு சென்ற செங்கோட்டையன் எனக்கு அங்குள்ள தமிழ் சங்கம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டு இருந்தது. கடந்த 6 நாட்களாக பின்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள செங்கோட்டையன் அங்குள்ள அனுபவ பள்ளியின் கற்பித்தல் முறை பற்றியும் பாடபுத்தகம் மாணவர்களின் திறன் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை கேட்டறிந்தார்.

அதுமட்டுமல்லாமல், நேரம் கிடைக்கும் போதெல்லாம் செங்கோட்டையன் பின்லாந்தில் பியானோ, கூடைப்பந்து விளையாடுவது,,, இந்திய கிரிக்கெட் அணியின் நீல நிற ஆடையை அணிந்து பின்லாந்தில் கிரிக்கெட் விளையாடுவதுமாக பொழுதை கழித்து வருகிறார் செங்கோட்டையன்.

ஆனால் இதில் ஒவ்வொன்றிலிருந்தும் ஒவ்வொரு புது விஷயத்தை தெரிந்து கொண்டு இந்தியா திரும்ப உள்ளார் செங்கோட்டையன்.  கடந்த ஆறு நாளில் மட்டும் பல்வேறு பணிகளை பார்வையிட்ட செங்கோட்டையன் பாடத்திட்டங்கள் கற்பிக்கும் முறை, தமிழக அரசு பள்ளியில் வேறு என்னென்ன மாற்றங்கள் கொண்டு வர வேண்டும் என்ற புத்துணர்ச்சியுடன் தமிழகம் திரும்புவார் என  எதிர்பார்க்கப்படுகிறது.