"செம்ம ஸ்டைலாக" அமைச்சர் செங்கோட்டையன்..! காலில் ஷூ.. கைகளில் கிளவ்ஸ்... கையில கிரிக்கெட் பேட் ..! 

ஒரு பக்கம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி லண்டன் சென்று பல்வேறு புரிந்துணர்வு  ஒப்பந்தம்  மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பின்லாந்து சென்று கல்வி முறை பற்றி கேட்டறிந்து வருகிறார். 

லண்டன்: ஃபின்லாந்து லிலுன்லாட்சி மழலையர் பள்ளியை பார்வையிட்டு கல்வி முறை பற்றி கேட்டறிந்த அமைச்சர் செங்கோட்டையன். ஃபின்லாந்தின் ஜோன்சு ஹெய்னாபுரோடில் உள்ள லிலுன்லாட்டி பள்ளியின் கல்வி முறை, மாணவர்களின் திறன் குறித்து அமைச்சர் கேட்டறிந்தார்.


 
பாட புத்தகம், கல்வித்தரம், கற்பிக்கும் முறை என அனைத்து விவரத்தையும் கேட்டறிந்த அமைச்சர் செங்கோட்டையன் அங்கு இந்திய கிரிக்கெட் அணியின் நீல நிற உடையை அணிந்து, காலில் ஷூ கைகளில் கிளவ்ஸ் அணிந்து கையில் பேட்டை பிடித்து ஸ்டைலாக நின்று போஸ் கொடுத்து உள்ளார்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் இன்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்து உள்ளது.