பிரியாணி தெரியும்.. ஆனா மினியேச்சர் சிக்கன் பிரியாணி தெரியுமா? 38 Million வியூஸ் பெற்ற வைரல் குக்கிங் வீடியோ!
Miniature Chicken Biriyani : இணையத்தை பொருத்தவரை அதிக அளவில் பலரும் விரும்பிப் பார்க்கும் வீடியோக்களில் ஒன்று தான் சமையல் வீடியோக்கள்.
சமூக வலைதளங்கள் எதை திறந்தாலும், இப்பொழுது பலவிதமான வீடியோக்கள் அதில் வலம் வருகின்றது. குறிப்பாக இந்த இன்ஸ்டாகிராம் ரீலிஸ்களில் பெரிய அளவில் டிரெண்டாகி வருவது சமையல் வீடியோக்கள் தான். ஆரோக்கியமான உணவுகள் தொடங்கி, வினோதமான முறையில் உணவு தயாரிப்பது வரை என்று பல வகையான வீடியோக்கள் இப்பொழுது இணையத்தை கலக்கி வருகிறது என்றால் அது மிகையல்ல.
அந்த வகையில் ஒரு பிரியாணி மேக்கிங் வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் வெளியாகி, இப்பொது சுமார் 38 மில்லியன் வியூஸ்களை பெற்று அசத்தியிருக்கிறது. அட, தினமும் லட்சக்கணக்கான பிரியாணி மேக்கிங் வீடியோக்கள் வந்துபோகிறது, ஆனால் இந்த ஒரு வீடியோ மட்டும் இவ்வளவு அதிக பார்வைகளை கொண்டிருக்க காரணம் என்ன என்றது நீங்கள் கேட்பது முறைதான். இப்படி தாறுமாறாக ட்ரெண்டிங்கான அந்த பிரியாணி மேக்கிங் வீடியோ, ஒரு மினியேச்சர் வீடியோ ஆகும்.
திருநெல்வேலி ஸ்பெஷல் தக்காளி பச்சடி.. ரெசிபி இதோ!
மினியேச்சர் வீடியோ என்றால் என்ன?
பொதுவாக ஒரு கட்டிடம் அல்லது ஏதோ ஒரு பிரம்மாண்டமான விஷயத்தை கட்டமைக்கும்போது அதற்கான சிறிய மாதிரிகள் தயாரிக்கப்பட்டு, அதன் மூலம் பல விஷயங்கள் கணிக்கப்படும். அதை தான் பொதுவாக மினியேச்சர் என்பார்கள். இப்பொது அந்த முறை சமையல் கலையலிலும் புகுந்துவிட்டது என்றே கூறலாம். இவ்வகை வீடியோக்களில், சமையல் நிபுணர்கள் பயன்படுத்தும் எல்லாமே சிறியதாக இருக்கும். அதாவது சமைக்கும் சட்டி முதல், அடுப்பு, கரண்டி, மிக்சி என்று எல்லாமே சிறியதாக இருக்கும்.
அந்த வகையில் இன்ஸ்டாகிராமில் தனது சமையல் திறனை வெளிப்படுத்தும் ஒரு நபர், இந்த வைரல் மினியேச்சர் சிக்கன் பிரியாணி வீடியோவை வெளியிட்டுள்ளர். குட்டி அடுப்பு, அதன் மேல் வைக்க குட்டி பாத்திரம். மசாலா அரைக்க குட்டி கிரைண்டர் என்று அந்த வீடியோ பார்ப்பதற்கு மிகவும் ஜனரஞ்சகமாக அமைந்துள்ளது. இந்த வீடியோவிற்கு பல்வேறு விதமான கமெண்டுகளும் குவிந்துள்ளது. சிலர் கிண்டலாக, இந்த பிரியாணியில் உள்ள முட்டை கோழி முட்டையை இல்ல பல்லி முட்டையா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.