ஒரு பாக்கெட் பால் விலை 200 ரூபாயா ?

முதல்வர் உடல்நிலை குறித்த வதந்தியால், oru ஒரு சல சமூக விரோதிகள், தங்கள் வீட்டில் விசேஷம் என கூறி, பால் முகவர்களிடம் அதிக அளவில் பால் கொள்முதல் செய்து உள்ளனர்.

பின்னர் பொதுமக்களிடம் , முதல்வர் உடல் நிலையாயை காரணம் காட்டி ,இன்று பால் கிடைப்பது கடினம் என வதந்தி கிழப்பி விட்டுள்ளனர்.இந்த செய்தி தொலைபேசி வாயிலாக பால் முகவர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது ஒரு பாக்கெட் பால் 200 ரூபாய் வரை விற்கப்பட்டுள்ளது.

இது குறித்து பால் முகவர்களிடம் கேட்டபோது, மக்கள் யாரும் இந்த வீண் வதந்திகளை நம்பி, அதிக அளவில் பணம் கொடுத்து பால் வாங்க வேண்டாம் என்றும், அதே சமயத்தில் இது போன்ற நபர்கள் யாரேனும் தென்பட்டால் போலீசிடம் ஒப்படையுங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.