வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக மிதமான மழை தொடர்ந்து பெய்து வருகிறது.

குறிப்பாக குரோம்பேட்டை பல்லாவரம் கிண்டி வடபழனி அசோக்நகர் திருவல்லிக்கேணி ராயப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தொடர் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர். ஒரு சில இடங்களில் மட்டும் மழை நீர் தேங்கி நிற்கிறது.
இதனால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை சற்று பாதிப்புக்குள்ளாகி உள்ளது.

இந்த நிலையில் இன்று காலை முதலே சென்னை முழுவதும் மிதமான மழை தொடர்ந்து பெய்து வருவதால் குளிர்ந்த காற்றுடன் இதமான சூழல் நிலவுகிறது. இந்த ஒரு அற்புதமான கிளைமேட்டை சென்னை மக்கள் ரசித்து வருகின்றனர். வெளி மாவட்டங்களை பொறுத்தவரையில் வேலூர் மாவட்டம் வாணியம்பாடி ஆம்பூர் குடியாத்தம் பள்ளிகொண்டா பொய்கை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பெய்த கனமழையின் காரணமாக 50 கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து சேதப்படுத்தி உள்ளது.