Asianet News TamilAsianet News Tamil

மேஷம் முதல் மீனம் வரை ராசிப்பலன்..!

உடன்பிறப்புகள் உங்களுக்கு அதிக ஒத்துழைப்பு கொடுப்பார்கள். வீடு மற்றும் வாகன வகையில் பராமரிப்பு செலவு அதிகரிப்பதோடு பெற்றோர் வழியில் இருந்துவந்த தகராறு குறையும்.
 

mesham to meenam  horoscope predictions
Author
Chennai, First Published Jun 5, 2019, 1:17 PM IST

மேஷம் முதல் மீனம் வரை ராசிப்பலன்..!

மேஷ ராசி நேயர்களே..!

உடன்பிறப்புகள் உங்களுக்கு அதிக ஒத்துழைப்பு கொடுப்பார்கள். வீடு மற்றும் வாகன வகையில் பராமரிப்பு செலவு அதிகரிப்பதோடு பெற்றோர் வழியில் இருந்துவந்த தகராறு குறையும்.

ரிஷப ராசி நேயர்களே..! 

குடும்ப முன்னேற்றம் குறித்து முக்கிய திட்டமிடுவீர்கள். உடன்பிறப்புகள் வழியில் உங்களுக்கு அதிக நன்மை கிடைக்கும். இழுபறியாக இருந்து வந்த பல வழக்குகள் வெற்றி பெறுவீர்கள்.

மிதுன ராசி நேயர்களே..! 

ஆடை ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெற வாய்ப்பு உண்டு. சேமிப்பை அதிகரிக்க செய்வீர்கள்.

கடக ராசி நேயர்களே..!

தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். தொலைபேசி மூலமாக ஒரு நல்ல செய்தி வந்தடையும்

சிம்ம ராசி நேயர்களே..!

உங்களது வசதிகளை பெருக்கிக் கொள்வீர்கள். வழக்கமாக செய்யும் பணியை விட என்று உங்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவம் கிடைக்க வாய்ப்பு உண்டு. உங்களுடைய எண்ணம் மேலோங்கும்.

கன்னி ராசி நேயர்களே..! 

இன்று உங்களுக்கு லாபம் அதிகரிக்க கூடும். குடும்பத்தில் உங்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். நீண்டதூர பயணங்களை மேற்கொள்ள நேரிடலாம். தொழில் வளர்ச்சி இருக்கும்.

துலாம் ராசி நேயர்களே...!

பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள் இது. விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் நாள். இன்று கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். தொழில் வளர்ச்சியில் தொல்லை தந்தவர்கள் உங்களைவிட்டு விலகிச்செல்வார்கள்.

விருச்சிக ராசி நேயர்களே...! 

எதுவாக இருந்தாலும் யோசித்து செயல்பட வேண்டியது நல்லது.  நண்பர்களிடம் நீங்கள் கொடுத்த வேலையை மீண்டும் உங்களையே வந்து சேரலாம். வீடு மாற்றம் பற்றி யோசனை செய்வீர்கள்.

தனுசு ராசி நேயர்களே..! 

கல்யாண முயற்சி உங்களுக்கு கைகூடும். தொழில் வளர்ச்சியை அதிகரிக்க செய்யும். உங்கள் நண்பர்கள் உறுதுணையாக இருந்து உங்களுடன் தோள் கொடுப்பார்கள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு அடுத்த கட்ட முன்னேற்றத்திற்கு திட்டமிடுவீர்கள்.

மகர ராசி நேயர்களே..!

 நண்பர்களால் உங்களுக்கு அதிக நன்மை உண்டு. குடும்பத்தாரின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பது நல்லது.

கும்ப ராசி நேயர்களே...!

உங்களுடைய மரியாதை உயரும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். உங்களைப் பிரிந்து சென்றவர்கள் மீண்டும் உங்களை நாடி வருவார்கள்.

மீனராசி நேயர்களே..! 

நிர்வாகத் திறமை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள்.

Follow Us:
Download App:
  • android
  • ios