மேஷம் முதல் கன்னி வரை..! இந்த வாரம் ஜகஜோதியா இருக்கப்போகுது..! 

மேஷ ராசி நேயர்களே!

இந்த வாரம் உங்களுக்கு வெற்றிகரமாக அமைய போகிறது. செய்யும் தொழில். வியாபாரத்தில் புதிய திருப்பங்கள் வரும். கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சி அதிகரிக்கும். பெண்களுக்கு கலை துறையில் அதிக ஆர்வம் இருக்கும். வெளியூர் செல்லும்போது, வாகனங்களில் செல்லும் போதோ கவனமாக செல்வது நல்லது.

ரிஷப ராசி நேயர்களே!

கடுமையான முயற்சிக்கு நல்ல வெற்றி கிடைக்கும். வீண் அலைச்சல் ஏற்படலாம் கவனமாக இருப்பது நல்லது.  சக ஊழியர்களிடம் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. பணிச்சுமை அதிகரிக்கும். எதிர்கால எண்ணங்கள் மேலோங்கும் மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.

மிதுன ராசி நேயர்களே ! 

இந்த வாரம் எல்லா வகையிலும் உங்களுக்கு நன்மை நடக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்யும் எண்ணம் மேலோங்கும். மகிழ்ச்சி உண்டாகும். வெளியூர் பயணம் மேற்கொள்ள நேரிடலாம். இந்த வாரம் உற்சாகமாக காணப்படுவீர்கள். கலைத்துறையினருக்கு வேலையில் தொய்வு ஏற்படலாம். பல முக்கிய நபர்களின் அறிமுகம் உண்டாகும் தன்னம்பிக்கை உயரும்.

கடக ராசி நேயர்களே!

எடுத்த காரியத்தை திறமையாக செய்து முடிக்க தேவையான உதவிகள் வந்து சேரும். வியாபாரம் நல்லபடி நடக்கும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். பெண்கள் வலிமையாக காணப்படுவார்கள் தொடர்ந்து முயற்சி செய்யவேண்டும். செய்யும் தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். அரசியல்வாதிகள் மேடைப் பேச்சின் போது கவனமாக பேசுவது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் அதிக நாட்டம் தேவைப்படும்.

சிம்ம ராசி நேயர்களே!

நீங்கள் சில நாட்களாக நடக்கவேண்டும் என எண்ணிய காரியம் இந்த வாரம் நடக்கும். வெற்றி கிட்டும். உங்களை சுற்றி இருந்த துன்பங்கள் உங்களை விட்டு விலகும். கடன் பிரச்சினை குறையும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். கலைத்துறையினருக்கு சில தொல்லைகள் வரலாம். அரசியல்வாதிகளுக்கு தெளிவான சிந்தனை பிறக்கும். மாணவர்கள் நன்கு படிக்க வேண்டும். படிப்பில் சற்று ஆர்வம் காண்பித்தால் நல்லது.

கன்னி ராசி நேயர்களே!

இந்த வாரம் எதிர்பார்த்த சில விஷயங்கள் சற்று தாமதமாக ஏற்பட்டாலும் முடிவில் சாதகமாக முடியும். துணிச்சலுடன் எந்த காரியத்தையும் எடுத்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த நன்மையை விட கூடுதலாக பல நன்மைகள் நடக்கும். வங்கி கடன்களை எதிர்பார்த்து இருந்தால் இந்த வாரம் வங்கி கடனும் கிடைக்கும். குடும்பத்தில் அனைவரும் ஒற்றுமையுடன் இருப்பார்கள். பெண்கள் திட்டமிட்டு செலவு செய்வது சிறந்தது. கலைத்துறையினருக்கு வெளிநாட்டிலிருந்து நல்ல ஒரு செய்தி வந்து சேரும்.