மேஷம் முதல் கன்னி ராசியினருக்கு இன்று இப்படியா..? 

மேஷ ராசி நேயர்களே..! 

எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் வந்து சேரும். பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். எதிலும் நிதானமுடன் செயல்படுவது நல்லது.

ரிஷப ராசி நேயர்களே...!

உங்களுடைய புத்திசாலித்தனத்தால் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். பிரபலங்கள் நண்பர்களாக அறிமுகமாவார்கள். பணவரவு எதிர்பார்த்த அளவுக்கு இருக்கும். திடிரென விருந்தினர்கள் வீட்டிற்கு வரலாம்.

மிதுன ராசி நேயர்களே...!

உங்களுடைய பழைய நண்பர்களை சந்தித்து மகிழ்ச்சியாக இருப்பீர்கள். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். உங்களுக்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பிரபலங்களின் உதவியை நாடவேண்டிய சூழல் உருவாகும். குடும்பத்தினரின் விருப்பங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். வீடு வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். திடீரென வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டிவரும்.

சிம்மராசி நேயர்களே...!

நீண்ட நாள் ஆசைகள் நிறைவேற கூடிய நாள் இது. சுப நிகழ்ச்சிகள் மிக விரைவாக நடக்கும். வருங்காலம் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். மனைவி வழியில் உங்களுக்கு ஆதரவு இருக்கும்.

கன்னி ராசி நேயர்களே..!

எடுத்த காரியங்களை எப்படியாவது முடித்துவிட வேண்டும் என நினைப்பீர்கள். உங்களுடைய வைராக்கியம் உங்களை வாழ்வில் மேன்மை அடைய வைக்கும். பூர்வீக சொத்து உங்கள் கையில் வந்து சேரும்.