மேஷம் முதல் கன்னி வரை ராசிப்பலன்..! 

மேஷ ராசி நேயர்களே..!

வீடு மனை வாங்குவது குறித்து குடும்பத்தாருடன் ஆலோசனை செய்வீர்கள். தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு.திடீரென அலைச்சல் ஏற்படும். பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரலாம்.

ரிஷப ராசி நேயர்களே..!

பிரச்சனைகளை எதிர் கொள்ளும் சந்தர்ப்பம் சூழ்நிலை அமையும். தோல்வி பயம் நீங்கி வெற்றியை நோக்கி பயணம் செய்வீர்கள். கடனைத் தீர்ப்பதற்காக பல வழிகளில் யோசனை செய்வீர்கள்.

மிதுன ராசி நேயர்களே...!

குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த மனக்கசப்பு நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். பணவரவு அதிகரிக்கும். உங்களுக்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

கடக ராசி நேயர்களே...!

முன்கோபம் அதிகமாக இருக்கும்...குறைத்துக்கொள்வது நல்லது. சில பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சில நேரங்களில் வருத்தம் ஏற்படும். பழைய கசப்பான சம்பவங்கள் உங்கள் நினைவுக்கு வரலாம்.

சிம்மராசி நேயர்களே..!

நீண்ட ஆண்டுகளாக பழகிய நண்பர் ஒருவரை இழக்க நேரிடலாம். அரசு தொடர்பான காரியங்களில் சில சிக்கல் வரக்கூடிய நிலை உண்டு. 

கன்னி ராசி நேயர்களே...!

குடும்பத்தில் நீங்கள் சொல்வது தான் கேட்பார்கள். உங்களுடைய பலம் பலவீனத்தை உணர்ந்து கொண்டு அதற்கேற்றவாறு நடந்து கொள்வீர்கள்.