மேஷம் முதல் கன்னி வரை ராசிப்பலன்..!

மேஷ ராசி நேயர்களே..!

அதிகாரப் பதவியில் இருப்பவர்களால் உங்களுக்கு ஆதாயம் உண்டு. பூர்வீக சொத்து பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்க கூடிய நாள் இது. விருந்தினர் வருகையால் வீடு கலகலப்பாக இருக்கும்.

ரிஷப ராசி நேயர்களே...!

விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். செலவுகளைக் குறைக்க திட்டமிடுவீர்கள். புதிய முயற்சிகள் மேற்கொள்வீர்கள். திடீர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரும் 

மிதுன ராசி நேயர்களே...!

புதிய முயற்சிகள் வெற்றியில் முடியும். எதிர்பாராத செலவுகள் வந்தாலும் சமாளிக்க கூடிய திறமை பெற்று இருப்பீர்கள். திடீர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரலாம். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டு பேச வேண்டாம்.

கடகராசி நேயர்களே...!

பிள்ளைகளின் கோபத்தை அன்பால் சொல்லி புரியவைக்க முடியும். உங்களுக்கு சிலர் உதவ முன்வந்து மிகவும் கஷ்டத்தை கொடுப்பார்கள். எதிரிகள் மறைமுகமாக வளர்ந்து வருவார்கள்.

சிம்ம ராசி நேயர்களே...!

உங்களைப் புரிந்துகொள்ளாமல் விலகிச் சென்றவர்கள் மீண்டும் உங்களிடம் வந்து பேசுவார்கள். மனைவி வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு.

கன்னி ராசி நேயர்களே...!

நண்பர்கள் உறவினர்கள் உங்களை நாடி வந்து பேசுவார்கள். கடன் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்து முக்கிய முடிவு எடுப்பீர்கள். பண வரவு திருப்தியாக இருக்கும்.