மேஷம் முதல் கன்னி வரை ராசிபலன்..!

மேஷ ராசி நேயர்களே..!

இன்று உற்சாகமாக காணப்படுவீர்கள். எதிர்பார்த்த இடத்தில் இருந்து நல்ல செய்தி உங்களை வந்தடையும். வெளிவட்டாரத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

ரிஷப ராசி நேயர்களே...!

செலவுகளை குறைக்க முயற்சி செய்வீர்கள். குடும்பத்தினரின் உணர்வுகளை புரிந்துகொண்டு அதற்கேற்றவாறு நடந்து கொள்வீர்கள். உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது சிறந்தது.

மிதுன ராசி நேயர்களே..!

குடும்பத்தைப் பற்றிய கவலைகள் அவ்வப்போது வரும். வெளிவட்டாரத்தில் யாரையும் விமர்சனம் செய்ய வேண்டாம். தன்னம்பிக்கையுடன் போராடுங்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். எடுத்த செயலில் வெற்றி காண்பீர்கள்.

கடக ராசி நேயர்களே..!

உங்களுடைய விடாமுயற்சியால் வாழ்க்கையில் முன்னேறுவீர்கள். வெளிவட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். எந்த காரியத்தையும் நிதானமாக செயல்படுவது நல்லது.

சிம்மராசி நேயர்களே...!.

உங்களுடைய புகழ், கௌரவம் அதிகரிக்கும். ஒரு சிலர் உங்களை சந்தித்து முக்கியமான விஷயங்களை பேசுவார்கள். உதவி செய்வார்கள். பணவரவு இருக்கும். சுப காரியங்கள் நடக்கும்.

கன்னி ராசி நேயர்களே....!

பணப்புழக்கம் அதிகரிக்க கூடும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் வரும். மரியாதை உயரும். திடீரென பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரலாம்.