மேஷ ராசி நேயர்களே..!

எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். வெளிவட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். வீடு மனை வாங்குவது குறித்து முயற்சி மேற்கொள்வீர்கள்.

ரிஷப ராசி நேயர்களே..!

கடந்த காலத்தில் நடந்த இனிய சம்பவங்களை நினைத்து மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நண்பர்கள் உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். உங்களை சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை அறிந்து கொண்டு சற்று தள்ளி இருப்பீர்கள்.

மிதுன ராசி நேயர்களே..!

விருந்தினர் வருகையால் வீட்டில் கல கலப்பான சூழல் நிலவும். பாதியில் நின்ற வேலைகள் முடியும். புதியவர்கள் நண்பர்களாக அறிமுகமாவார்கள். பல கோவில்களுக்கு சென்று வர திட்டமிடுகிறார்கள்.

கடக ராசி நேயர்களே..!

சிலரின் விமர்சனங்களுக்கும் கேலிப் பேச்சும் உங்களை வேதனை படுத்தலாம். பண விஷயத்தில் உஷாராக இருப்பது நல்லது.

சிம்ம ராசி நேயர்களே..!

பிள்ளைகளால் உங்களுக்கு மகிழ்ச்சி கிடைக்கும். உறவினர்கள் உதவி செய்வார்கள். விலை உயர்ந்த மின்சார சாதனங்களை வாங்க திட்டமிடுவீர்கள். பழைய நண்பர்கள் வந்து உங்களை வந்து சந்திப்பார்கள்.

கன்னி ராசி நேயர்களே...!

குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு நடப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உங்களுக்கு நண்பர்களாக அறிமுகமாவார்கள். திடீரென பயணங்களை மேற்கொள்ள வேண்டி வரலாம்.