மேஷ ராசி நேயர்களே..!

வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும் நாள் இது. தொல்லை தந்தவர்கள் உங்களை விட்டு விலகிச் செல்வார்கள். குடும்பத்தினர்களிடம் கவனமாக பேசி மகிழ்வாக இருப்பது நல்லது. பாதியில் நின்ற வேலையை தொடர்ந்து செய்ய முற்படுவீர்கள்.

ரிஷப ராசி நேயர்களே..!

உங்களை விட்டு விலகிச் சென்றவர்கள் மீண்டும் உங்களை தேடி வருவார்கள். அடுத்தவர் நலனில் அதிக அக்கறை காண்பிக்கக்கூடிய நபர் நீங்கள். உங்களுடைய நண்பர்கள் மிகவும் ஒத்துழைப்பு தருவார்கள்.

மிதுன ராசி நேயர்களே..!

பலநாள் இருந்துவந்த பிரச்சினைகள் ஒரு முடிவுக்கு வரும். புதிய முயற்சியில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் அடுத்த கட்ட முயற்சி மேற்கொள்வீர்கள். உங்கள் பிள்ளைகள் மூலம் உங்களுக்கு பெருமை வந்தடையும்.

கடக ராசி நேயர்களே...!

உங்களுடைய கனவு நனவாக கூடிய நாள் இது. வெளிவட்டாரத்தில் ஏற்படக் கூடிய புதிய பழக்கவழக்கத்தால் மனம் நிம்மதியாக இருப்பீர்கள். வாங்கிய கடனைக் கொடுத்து மகிழக்கூடிய நாள்.

சிம்ம ராசி நேயர்களே...!

பல முக்கிய நபர்களின் சந்திப்பால் உங்களுக்கு ஆதரவு கிடைக்கும். வாகன மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். குடும்பத்தில் சில சுப காரியங்கள் நடைபெற வாய்ப்புகள் உண்டு. வீடு வாங்கும் முயற்சியில் ஈடுபடலாம்.

கன்னி ராசி நேயர்களே...!

அடிப்படை வசதிகளை மேம்படுத்திக் கொள்ள விருப்பம் தெரிவிப்பீர்கள். உடன்பிறப்புகள் உங்களுக்கு ஆறுதலாக இருப்பார்கள். இடம் வாங்க விற்க ஆயத்தமாவார்கள்.