மேஷம் முதல் கன்னி வரை ராசிப்பலன்...!

மேஷ ராசி நேயர்களே...!

இன்றைய நாள் உங்களுக்கு ஆதாயம் கிடைக்க கூடிய நாளாக அமையும் பொறுமையாக செயல்பட வேண்டிய நாள். கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது.

ரிஷப ராசி நேயர்களே..!

கனிவாகப் பேசி அனைத்து காரியங்களையும் சாதித்துக் காட்ட கூடிய நாள். பிரிந்து சென்றவர்கள் உங்களுடன் மீண்டும் வந்து பேசுவார்கள். வருமானம் எதிர்பார்த்த அளவுக்கு இருக்கும். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்தி உங்களை வந்தடையும்.

மிதுன ராசி நேயர்களே...!

நல்லவர்களின் தொடர்பால் உங்களுக்கு எப்போதும் ஆதாயம் உண்டு. உங்களுடைய பெயர் புகழ் என்றும் கூடும். லாப நோக்கத்தோடு பழகியவர்களை இனம் கண்டு அவர்களை விட்டு விலகி நிற்பீர்கள்.கடன் சுமை குறைய வாய்ப்பு உண்டு.

கடக ராசி நேயர்களே...!

தொட்ட காரியங்களில் உங்களுக்கு வெற்றி அடையும் நாள். இல்லம் தேடி பல நல்ல செய்திகள் உங்களை வந்தடையும். பிள்ளைகள் மூலம் உதிரி வருமானங்கள் வாங்க கூடிய சூழ்நிலை உருவாகும். கல்யாண பேச்சு உங்களது வீட்டில் இன்று தொடங்கும்.

சிம்ம ராசி நேயர்களே...!

உங்களுடைய நட்பால் பல நன்மைகள் உங்களுக்கு கிடைக்கும். அதிகாரிகள் உங்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்வார்கள். 

கன்னி ராசி நேயர்களே...!

உடன்பிறப்புகளின் உதவி உங்களுக்கு கிடைக்கும். வழக்குகளில் இருந்து வந்த பல தடைகள் நீங்கி வெற்றி கிடைக்கும். நிதானத்துடன் செயல்பட்டு சாதிப்பது நல்லது.