மேஷம் முதல் கன்னி  வரை ராசிப்பலன்..! 

மேஷ ராசி நேயர்களே...!

சவாலான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிக்கும் நாள் இது. பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். கல்யாண பேச்சு வார்த்தை தொடங்குவீர்கள்.

ரிஷப ராசி நேயர்களே..!

பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள் இது. உங்களது உறவினர்கள் நண்பர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும்.

மிதுன ராசி நேயர்களே..!

குடும்ப வருமானத்தை உயர்த்த வேறு என்னென்ன வேலைகள் செய்ய வேண்டும் என முயற்சி செய்து பார்ப்பீர்கள். நீண்ட நாள் இருந்து வந்த பிரார்த்தனையை குடும்பத்துடன் சென்று நிறைவேற்ற முற்படுவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை அதிகமாக இருக்கும்.

கடக ராசி நேயர்களே..!

உங்களது பிரியமானவர்களின் சந்திப்பு எதிர்பாராமல் இன்று நடக்கலாம். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிக்க முற்படுவீர்கள். வீடு வாகன பராமரிப்புச் செலவு எதிர்பார்த்ததைவிட அதிகமாக ஏற்பட வாய்ப்பு உண்டு.

சிம்மராசி நேயர்களே...!

பல விவாதங்களில் வெற்றி பெற்று மகிழ்ச்சி அடைவீர்கள். தொலைதூரத்தில் இருந்து உங்களுக்கு ஒரு நல்ல செய்தி தேடி வரும்.

கன்னி ராசி நேயர்களே...!

துடிப்புடன் செயல்பட்டு பல்வேறு செயல்களை செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல் குழப்பம் நீங்கி அமைதி திரும்பும் நாள் இது. அரைகுறையாக நின்ற வேலைகள் எளிதில் முடிப்பீர்கள்.