மேஷம் முதல் கன்னி வரை ராசிப்பலன்..!  

மேஷ ராசி நேயர்களே...!

இன்று சில முக்கியமான விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். மற்றவர்களுக்காக செலவுகள் செய்து சந்தோஷப்படுவீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும்.

ரிஷப ராசி நேயர்களே...!

உறவினர்களில் யார் உண்மையாக உங்களுக்கு உள்ளனர் என்பதை புரிந்து கொள்வீர்கள். குலதெய்வப் பிரார்த்தனையை தன் குடும்பத்துடன் சென்று நிறைவேற்றுவீர்கள்.

மிதுன ராசி நேயர்களே..!

பிரச்சனையை தீர்க்க பல கோணங்களில் சிந்தித்து செயல்படுவீர்கள். வீடு வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. சில அரசு அதிகாரிகள் உங்களுக்கு உதவி செய்ய முற்படுவார்கள்.

கடக ராசி நேயர்களே...! 

தாய்வழி உறவினர்கள் மத்தியில் உங்களுக்கு மதிப்பு உயரும். விருந்தினர் வருகையால் வீடு மகிழ்ச்சியாக இருக்கும். சொத்து வாங்குவது விற்பது லாபகரமாக அமையும்.

சிம்ம ராசி நேயர்களே....!

மனைவி வழியில் உங்களுக்கு மதிப்பு கூடும். அழகு இளமை என  புத்துணர்ச்சியாக காணப்படுவீர்கள். கேட்ட இடத்தில் இருந்து உங்களுக்கு உதவி கிடைக்கும்.

கன்னி ராசி நேயர்களே...!

பழைய பிரச்சனைகள் மீண்டும் உங்கள் நினைவுக்கு வரும். பொறுமையை இழக்க நேரிடும். உறவினர்கள் நண்பர்களின் பேச்சும் செயல்பாடுகளும் உங்களுக்கு பிடிக்காமலும் போகலாம்.