மேஷம் முதல் கன்னி வரை ராசிபலன்..! 

மேஷ ராசி நேயர்களே..!

குடும்பத்துடன் ஆன்மீகப் பயணங்களை மேற்கொள்வீர்கள். குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளி நபர்களிடம் பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். உங்களுக்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

ரிஷப ராசி நேயர்களே..!

கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். பிரபலங்களின் நட்பு உங்களுக்கு கிடைக்கும். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை கேட்க காத்திருப்பார்கள்.

மிதுன ராசி நேயர்களே...!

வாழ்க்கையில் நெளிவு சுளிவுகளை மிக எளிதாக கற்றுக் கொள்ளும் நாள் இது. தடைபட்ட காரியங்கள் நிறைவேறும். பிள்ளைகளால் உங்களுக்கு என்றும் பெருமை சேரும். எதிர்பார்த்த பணவரவு இருக்கும்.

கடக ராசி நேயர்களே...!

புதிதாக வாகனம் வாங்க திட்டமிடுவீர்கள். உறவினர்களால் உங்களுக்கு உதவி கிடைக்கும். உங்களுடைய கவுரவம் அதிகரிக்கும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த ஒரு நல்ல செய்தி உங்களை வந்தடையும்.

சிம்ம ராசி நேயர்களே...!

குடும்பத்தினருடன் அவ்வப்போது சண்டையிட்டு வந்தாலும் மிக எளிதாக பிரச்சினை முடியும். தர்மசங்கட சூழ்நிலை உருவானாலும் அதற்கு பெரிய அளவில் பிரச்சினை ஏற்படாது. அனாவசிய செலவுகளை தவிர்ப்பது நல்லது.

கன்னி ராசி நேயர்களே...!

உங்களின் அணுகுமுறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றி அமைக்கும் நாள் இது. விருந்தினர் வருகையால் குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். வீடு கட்டுவது வாங்குவது குறித்த பல்வேறு விஷயங்களில் திட்டமிடுவீர்கள் புதிய வாகனம் வாங்க ஆர்வம் உண்டாகும்.