மேஷம் முதல் கன்னி வரை ராசிபலன்..! 

மேஷ ராசி நேயர்களே..!

தொடர்ந்து இருந்துவந்த பிரச்சினை இன்று உங்களுக்கு முடிவுக்கு வரும். பணவரவு எதிர்பார்த்த அளவுக்கு இருக்கும். உறவினர்களுடன் நீண்ட நாட்களாக இருந்து வந்த பகை கொஞ்சம் கொஞ்சமாக குறையும்.வீடு வாங்க ஏற்பாடு செய்வீர்கள்.

ரிஷப ராசி நேயர்களே...!

விடாமுயற்சியுடன் செயல்பட்டு எடுத்த காரியத்தை முடிப்பீர்கள். பணத் தேவைகளை எளிதில் பூர்த்தி செய்து கொள்வீர்கள். நீண்டதூர பயணங்களை திடீரென மேற்கொள்ள வேண்டி நேரிடலாம்

மிதுன ராசி நேயர்களே...!

வெளிவட்டாரத்தில் உங்களது புகழ் அதிகரிக்கும். தொலைபேசி வழியில் நல்ல தகவல் கேட்க முடியும். சொத்துக்களால் வந்த பிரச்சனை விரைவில் முடிவுக்கு வரும்.

கடகராசி நேயர்களே...!

எதையும் தைரியத்தோடு செயல்பட்டு சாதனை படைக்கும் நாள் இது. உற்சாகத்தோடு செயல்பட்டு பணிபுரிவீர்கள். மறைமுகப் போட்டிகளை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். வாட்டி வதைத்து வந்த உடல் உபாதை சரியாக வாய்ப்பு ஏற்படும்.

சிம்ம ராசி நேயர்களே...!

இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். குடும்ப தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். பிள்ளைகளின் கல்வி நலன் குறித்து விவாதிப்பீர்கள். சொத்து சம்பந்தமாக பல பேச்சுக்கள் அடிபடும்.

கன்னி ராசி நேயர்களே..!

அலைச்சல்கள் அதிகரிக்கும். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் முடிப்பதில் தாமதம் ஏற்படும். எதிர்பார்த்த பணவரவு இருக்கும்.