மேஷம் முதல் கன்னி வரை ராசிப்பலன்..! 

மேஷ ராசி நேயர்களே..!

உங்களின் தொழில் வளர்ச்சி மேலோங்கிக் காணப்படும். உங்களுடைய அடிப்படை வசதிகளை பெருக்கிக் கொள்வீர்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் உங்களுக்கு வந்தடையும்.

ரிஷப ராசி நேயர்களே...!

தொழில் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்கள் உங்களை வந்து சேரும். நண்பர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள்.

மிதுன ராசி நேயர்களே...!

மிகவும் நிதானத்துடன் செயல்பட்டு முடிவெடுக்க வேண்டிய நாள் இது. சேமிப்பில் இருந்து பணத்தை எடுக்க நேரிடலாம். திடீரென அலைச்சல் வர நேரிடலாம்.

கடக ராசி நேயர்களே...!

யாராக இருந்தாலும் பக்குவமாக பேசுவது நல்லது. தாமதமாக நடந்துகொண்டிருந்த வேலைகள் மும்முரமாக நடைபெறும். கணவன்-மனைவிக்குள் ஏற்பட்டு இருந்த கருத்துவேறுபாடு முற்றிலும் நீங்கும் நாள்.

இது சிம்ம ராசி நேயர்களே...!

உங்களது வீட்டில் நல்ல காரியம் நடைபெறும். தொலைபேசி மூலமாக சில நல்ல தகவல்கள் இன்று நீங்கள் கேட்கலாம். உறவினர்கள் உங்களுக்கு முன் வந்து உதவுவார்கள்.

கன்னி ராசி நேயர்களே...!

தைரியத்தோடு செயல்பட்டு பல சாதனைகளைச் செய்வீர்கள். கடன்சுமை மெல்ல மெல்ல குறையும். நீண்ட நாட்களாக உங்களுக்கு இருந்து வந்த உடல் உபாதை நீங்கும். தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள்.