மெரினா இயல்பு நிலைக்கு திரும்புகிறது......!!! விவரம் உள்ளே ....!!
கடந்த எட்டு நாட்களாகவே மெரினா என்றாலே , ஜல்லிக்கட்டுகான போராட்டக்காரர்களின் இடம் என அனைவரின் உள்ளத்திலும் நிலைத்து நிற்கிறது.ஆனால் மெரீனா பீச் எப்பொழுதுமே அனைவரும் விரும்பும் ஒரு இடமாகத் தான் இருக்கும்.
மாலை நேர உலா:
மாலை நேரத்தில், குடும்பம் குழந்தை என ஒரு பட்டாளமும், காதலர்கள் ஒரு பட்டாளமாகவும் , இளைஞர்கள் என பல்வேறுபட்ட மக்கள் சுற்றி பார்க்கும் ஒரு இடம் என்றால் அது மெரீனா தான்
அலை ஓசை :
கடல் அலை ஓசையை கேட்டுகொண்டே , கடலை வாங்கி சாப்பிட்டு கொண்டே நடக்கும் அந்த தருணம் விவரிக்க முடியாத இன்பம்.......
சுண்டல் ......குழல்....:
சுண்டல் விற்பதும், குழல் இசையும் எங்கும் கேட்க முடியும்........மேலும் குதிரை சவாரி உள்ளிட்ட அனைத்துமே அற்புதம் தான் .......
இயல்புநிலை :
மேல் குறிப்பிட்ட அனைத்தும் கடந்த எட்டு நாட்களாக அந்த அளவுக்கு இயல்பாக பார்க்க முடியாமல் இருந்தது. தற்போது ,ஜல்லிகட்டுக்காக போராடிய இளைஞர்கள், வெற்றியுடன் வீடு திரும்பும் தருவாயில் , இயல்பு நிலைக்கு திரும்புகிறது மெரீனா .....
தற்போது வழக்கம் போல் காதலர்கள் மெரினாவிற்கு வர தொடங்கிவிட்டனர்.
