ஒவ்வொரு நாளும் புது புது ஆடைகள் வந்துகொண்டே இருக்கிறது. எத்தனை வண்ணங்கள் எத்தனை வடிவங்கள் என பல மாடல்களில் புது புது வகையான வடிவங்களில் வந்து கொண்டே இருக்கிறது . குறிப்பாக பெண்களுக்கு என்றால், சொல்லவே தேவை இல்லை. எண்ணிலடங்கா டிசைனில் பல புது வரவுகள் காத்துக் கொண்டிருகிறது. அதற்கேற்றார் போல், பெண்களும் புது புது வரவை மிகவும் மகிழ்ச்சியாக வரவேற்கின்றனர்.

புதிய மாடல்களில் வெளிவரும் ஆடையை உடுத்துவதில் உள்ள , ஆனந்தம் வேறு எதிலும் இருக்காது அந்த வரிசையில் தற்போது , மஸ்தானி , பலசா உள்ளிட்ட ஆடைகள் இளம் பெண்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எங்கு அணியலாம் ?

திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்வுகள் முதல், பார்டி என அனைத்து இடங்களிலும் பொதுவாகவே அணிய கூடிய மாடலில் தான் மஸ்தானி உள்ளது . விலையோ சுமார் 75௦ ரூபாயிலிருந்து தொடங்குகிறது. விலைக்கு ஏற்றவாறு அதனுடைய மாடலும் மாறுகிறது.