முக சுருக்கத்தை தடுக்கும் சிறப்பு  "மசாஜ்"..! 

மசாஜ் செய்வதன் மூலமாக முக அழகை பாதுகாப்பது மட்டுமல்லாமல் சுருக்கத்தை கட்டுப்படுத்தவும் முடியும் என தெரியவந்துள்ளது. மசாஜ் செய்வதன் மூலம் உடல் சோர்வை அகற்றுவது மட்டுமல்லாமல் அழகாகவும் வைத்துக் கொள்ள முடியும். முகம் இளமையாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள முடியும்.

இதற்காக பல்வேறு க்ரீம், ஜெல், பவுடர், ஆயில் உள்ளிட்டவை இருக்கின்றன. ஒவ்வொருவரின் சரும சருமத்தை பொருத்து அதற்கேற்றவாறு ஜெல் பயன்படுத்த வேண்டுமா? ஆயில் பயன்படுத்த வேண்டுமா? பவுடர் பயன்படுத்த வேண்டுமா ? என்பதனை தீர்மானிக்க முடியும். பொதுவாக வறண்ட சருமம் இருப்பவர்கள் கொண்டவர்கள் ஆயில் பயன்படுத்தலாம். ஆயில் சருமம் கொண்டவர்கள் பவுடர் பயன்படுத்தலாம். 

பொதுவாகவே 18 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு முகம் பளபளப்பாக இருக்கும். எனவே இந்த மசாஜ் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குறிப்பாக பருக்கள் கரும்புள்ளிகள் கொண்டவர்கள் அவர்களுக்காகவே தனி ஜெல் இருக்கின்றது. அதனை பயன்படுத்தி மசாஜ் செய்தால் நல்ல பலன் கிடைக்கும். இது தெரியாமல் பலரும் அவர்களுக்கு பிடித்தமாதிரி சிலவகை ஆயில் மற்றும் பவுடர் கொண்டு மசாஜ் செய்து கொள்வதால் சரும பிரச்சனை ஏற்படுகிறது.

பொதுவாகவே முகத்தை மசாஜ் செய்தவுடன், ஃபேஸ் பேக் பயன்படுத்தினால் சருமம் மிகவும் பளிச்சென்று இருக்கும். எனவே மாதம் இருமுறை மசாஜ் செய்து கொண்டால் சருமம் புத்துணர்ச்சியாக காணப்படும். அதேபோன்று தினந்தோறும் வெளியே சென்று வருபவர்கள் அல்லது வெயிலில் அதிகமாக அலையும் வேலை கொண்டவர்கள் வாரத்திற்கு ஒரு முறையாவது இதுபோன்ற மசாஜ் எடுத்துக் கொண்டால் புத்துணர்ச்சியுடன் காணப்படுவார்கள். காரணம் ரத்த ஓட்டம் சீராக இருக்கும்.

முகத்திற்கு மட்டுமல்லாமல் தலைக்கு தேங்காய் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்து குளித்தால் முடி உதிர்வது கட்டுப்படுத்தப்படும். முகத்தில் கருவளையம் கொண்டவர்கள் பழங்களை கொண்டு மசாஜ் செய்து வந்தால் கருவளையம் நீங்கும். பாதங்களில் மசாஜ் செய்வதால் ரத்த ஓட்டம் சீரடையும். இன்றைய காலகட்டத்தில் பாதத்தில் நன்கு மசாஜ் செய்வதற்கு சில டெக்னிக்ஸ் இருக்கின்றது. இதற்காகவே பயிற்சி பெற்றவர்களிடம் மசாஜ் எடுத்துக் கொண்டால் சீரான ரத்த ஓட்டம் இருப்பதுடன் பாதமும் அழகுபெறும்.