maruthi 800 last unit delivered

இதுதான் கடைசி மாருதி 800 - முடிவுக்கு வந்தது தயாரிப்பு 

இந்திய மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த கார் என்றால் அது மாருதி 800 என்றே சொல்லலாம்... அன்று முதல் இன்று வரை இந் கார் மீது தனி கவனம் இருக்கும் அனைவருக்குமே.....

மாருதி 800

1983-ஆம் ஆண்டு முதல் தயாரிப்பில் இருந்த மாருதி 800 காரின் கடைசி யூனிட் அசெம்பிளி லைனில் இருந்து வெளிவந்தது.

இந்தக் கடைசி மாருதி 800,ஷில்லாங்கில் இருக்கும் ஒரு டீலர்ஷிப்புக்குச் அனுப்பப்பட்டது. இன்றுவரை கிட்டத்தட்ட 25 லட்சம் மாருதி 800 கார்கள் விற்கப்பட்டுள்ளன.

இன்னும் 10 வருடங்களுக்கு மாருதி 800 காருக்கான ஸ்பேர் பார்ட்டுகள் கிடைக்கும் என மாருதி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மக்கள் மனதில் மாருதி 800

மாருதி 800, இந்தியர்களின் மனதில் மிக முக்கிய இடம் பிடித்திருக்கும் ஒரு கார். 90-களில் பல குடும்பங்களுக்கு வீடு கட்டுவதைப் போல், மாருதி 800 காரை வாங்கிவிடவேண்டும் என்ற கனவு இருந்திருக்கும். இன்று கார் ஓட்டும் பலரும் இந்தக் காரில்தான் முதன்முதலாக கார் ஓட்டப் பழகி இருப்பர்.

இன்றளவும் இந்த காரை ஒரு சிலர் பயன்படுத்துவதை பார்க்க முடியும்.தற்போது மாருதி ஆல்டோ மற்றும் K10 மாடல் கார்கள் விற்பனையில் உள்ளது.