திருமணம் என்பது சொர்க்கத்தில்  நிச்சயிக்கப்பட்டது என்பார்கள். அந்த திருமணத்தை  எந்த அளவுக்கு சிறப்பாக செய்ய முடியுமோ அந்த அளவுக்கு  சிறப்பாக  செய்கிறோம். அதிலும்  திருமண  அழைப்பிதழில் பெரும் பங்கு உண்டு.

திருமண  அழைப்பிதழ் :

திருமண  அழைப்பிதழ்  என்பது எத்தனையோ  மாடல்களில்  வருகிறது.  எத்தனையோ  நிறங்களில்  வருகிறது.  ஆனால் மாடல்களுக்கு  ஏற்ப, அதனுடைய  விலையும் அமையும் .

மஞ்சள்  பத்திரிக்கை :

முன்பெல்லாம் மஞ்சள்  பத்திரிக்கை  தான் , அழைப்பிதழுக்கே  பெயர் போனது. ஆனால் இன்று  பல   ட்ரெண்டில் வெளி வருகிறது.

புது  ட்ரெண்டு  :

பல மாடல்களில் வரும் பத்திரிக்கை  என்பதெல்லாம்  கொஞ்சம் பழசு. தற்போது, ஏடிஎம் கார்டில் திருமண அழைப்பிதழ் செய்திருகிறார்கள் என்றால் பாருங்களேன்.  எந்த அளவுக்கு நம் மக்கள் , முன்னேறி  இருகிறார்கள்.  எப்படி எல்லாம் யோசிக்கிறார்கள் என தெரிந்துகொள்ள முடியும்.

வரவேற்கலாம் :

இப்படியும் கூட அழைப்பிதழை தயாரிக்க முடியும் , இதனையும்  நம் சொந்த  பந்தங்களுக்கு கொடுக்கலாம்  என , வித்தியாசமான முறையில்  ஏ டி எம்  கார்டில்  தயாரித்து உள்ளனர் இந்த திருமண  ஜோடிகள். தற்போது  இந்த  புது  ட்ரெண்டு, அனைவரையும்  வெகுவாக  ஈர்த்துள்ளது.