மாப்பிள்ளைச் சம்பான்னு ஒரு நெல் ரகம்...
இந்த அரிசியை சாப்பிட்டால் சக்கரை வியாதிக்காரங்க இன்சுலின் போடவே தேவையில்லை!
இந்த மாதிரி ஆயிரக்கணக்கான ரகங்களை பிலிப்பைன்ஸுக்கும், அமெரிக்காவுக்கும் கொண்டு போயிட்டாங்க.
விவசாயம் நசிஞ்சதுக்கு காவிரிப்பிரச்னை மட்டும்தான் காரணம்னு சொல்றாங்க. அது உண்மையில்லை. விவசாயிகளோட மனோபாவமும் காரணம்.
தமிழகத்தில் வழக்கொழிந்து போன 10 ஆயிரம் தமிழ் பாரம்பரிய நெல் ரகங்களையும் மீட்டு, தமிழக விவசாயத்தை மறுமலர்ச்சி அடையச் செய்வதுதான் செயராமனின் வீடு.
படித்தது பத்தாம் வகுப்புதான். ஆனால் ஒரு பேராசிரியரின் தெளிவோடு விவசாயமும், விஞ்ஞானமும் பேசுகிறார்.
தமிழ் பாரம்பரிய நெல் சாகுபடி பற்றி பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று பயிற்சி அளிப்பதோடு, விவசாயிகளுக்கு தமிழ் பாரம்பரிய விதைகளை இலவசமாகவும் வழங்குகிறார்.
வழக்கொழிந்து போன 63 நெல் ரகங்களை மீட்டு, வயற்காட்டுக்கு கொண்டு வந்த இவர், ‘ தமிழ் விதை வங்கி’ ஒன்றையும் நடத்துகிறார்.
அரசாங்கம் ஒற்றை நாற்று முறையில் நடவு செய்ய ஏக்கருக்கு 30 கிலோ விதையைப் பரிந்துரைக்கிறது.ஆனால் தமிழர் செயராமன் வெறும் 240 கிராம் போதும் என்கிறார்.
இதை பற்றி அவர் தெரிவிக்கும் போது,
‘ஒவ்வொரு வருஷமும் மே மாதம் கடைசி சனி, ஞாயிறுகள்ல எங்க குடிலுக்குப் பக்கத்தில நெல் திருவிழா நடக்கும். நெல் உற்பத்தி முதல் விற்பனை வரை உள்ள பிரச்னைகள் பத்தி விவாதிப்போம். தமிழ் பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி பண்ற பயிற்சிகளும் தருவோம். நிகழ்ச்சியோட இறுதியில, ஒரு விவசாயிக்கு ரெண்டு கிலோ வீதம் தமிழ் பாரம்பரிய விதைகளைக் கொடுப்போம்.
ஒரே ஒரு கண்டிஷன். 2 கிலோ விதையை வாங்கிட்டுப் போறவங்க, அதை சாகுபடி பண்ணி அடுத்த வருஷம் நாலு கிலோவா தரணும்.
இந்த வருஷம் நடந்த நெல் திருவிழாவுல 1860 விவசாயிகளுக்கு விதை கொடுத்திருக்கோம்’’ என வியக்க வைக்கிறார் தமிழர் செயராமன்.
