பா.ஜ.க மூத்த தலைவரான முரளி மனோகர் ஜோஷி

கான்பூர் தொகுதி எம்.பி.யாக உள்ள பா.ஜ.க மூத்த தலைவரான முரளி மனோகர் ஜோஷி கான்பூர் கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள சோலார் விளக்குகளை தொடங்கி வைக்க அழைக்கப்பட்டு இருந்தார்.

அதற்காக் மின் கம்பம் முன்னர் கலர் ரிப்பன் கட்டப்பட்டு இருந்தது.முரளி மனோகர் ஜோஷி வந்து நீண்ட நேரமாகியும் ரிப்பன் வெட்ட கத்தரிக்கோல் தரப்படவில்லை என  தெரிகிறது.

ஒரு கட்டடத்தில் கோபம் அடைந்த அவர்,கத்தரிக்கோல் கொண்டு வருவதற்குள் ரிப்பனை கையால் கிழித்து கீழே போட்டார். மேலும், அங்கிருந்த கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளை வார்த்தைகளால் வறுத்தெடுத்தார்.

சிறிது நேரத்திற்கு பின்னர், கத்தரிக்கோல் கொண்டு வரப்பட்டு ரிப்பன் மீண்டும் கட்டப்பட்டது.ஆனால், ஆத்திரம் தீராததால் அவர் அதிகாரிகளை திட்டியபடியே அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

 மேலும்,கடைசி வரை ரிப்பனை கட் செய்யாமல் புறக்கணித்து விட்டு அங்கிருந்து  சென்று விட்டார்.இந்த நிகழ்வு அங்கிருந்தவர்களுக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தி  உள்ளது.