உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ் மஹால்  மக்கள் மத்தியில்  என்றும் நீங்கா இடம் பிடித்துள்ளது. தாஜ் மகாலை பார்க்கும் போதே ஒரு விதமான உணர்வுகள் தோன்றும் .அதுவும் காதல் வசப் பட்டவர்களுக்கு தாஜ்மஹால் தான் காதல் சின்னம் .அந்த அளவிற்கு மனதை  கொள்ளையடித்த ஒன்று என்றால் அது தாஜ் மஹால் தான் என்பதில் மாற்றம் இல்லை

இத்தகைய சிறப்பு வாய்ந்த தாஜ் மஹால் தற்போது வெண்மை  நிறத்திலிருந்து  மஞ்சள்  நிறமாக  மாறி வருகிறது . காரணம் சுற்று வட்டார பகுதிகளில் எரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவு பொருட்கள் தான்  என கண்டறியப்பட்டுள்ளது .

தாஜ் மஹாலுக்கு மேக்கப் ?

மங்கி வரும் தாஜ் மஹாலின் நிறத்தை மாற்ற,மத்திய அரசு முடிவு செய்துள்ளது.அதன் படி “MUD  THERAPHY” எனப்படும் இந்த பூச்சு பூசுவதால், எப்பொழுதும் அதன் நிறம் மாறாமல் ஒரே மாதிரியாக  பொலிவுடன்  இருக்கும் என தெரிகிறது .

மட் தெரபி என்பது பெண்கள் தங்கள் அழகை பாதுகாக்க போட்டுக்கொள்ளும் மேக்கப் போன்றது தான்.இந்த தகவலை மத்திய சுற்றுலாத்துறைஅமைச்சர் மகேஷ் சர்மா தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .