ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் நடக்கும் மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா உற்சவம் களைகட்ட துவங்கியுள்ள்ளது. மாட வீதிகளில் வீதி உலா நடத்த அறநிலையத் துறை அனுமதி, அளித்துள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் நடக்கும் மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா உற்சவம் களைகட்ட துவங்கியுள்ள்ளது. மாட வீதிகளில் வீதி உலா நடத்த அறநிலையத் துறை அனுமதி, அளித்துள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சித்தூர் மாவட்டம் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோவிலில் மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா வருகிற 24-ந்தேதி தொடங்கி அடுத்த மார்ச் மாதம் 9-ந் தேதி வரை 14 நாட்கள் நடக்கிறது. கொரோனா கட்டுப்பாடுகள் இன்றி வழக்கம் போல் நடத்துவதற்கு மாநில அறநிலையத் துறை அனுமதி அளித்துள்ளது.

வெள்ளி அம்பாரி வாகன உலா மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழாவில் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் நடக்கும் உற்சவத்துக்குத் ஆண்டுதோறும், தனிச் சிறப்பு உண்டு. அங்கு, நடக்கும் பிரம்மோற்சவத்தில் ஒவ்வொரு நாளும் ஒரு தனிச் சிறப்பு உண்டு. சிவபெருமானின் துயில் எழுப்ப, தேவர்கள் நடத்தும் நிகழ்ச்சியை ‘தேவராத்திரி’ என அழைக்கின்றனர்.

மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ஏற்பாடுகளும் மும்முரமாக நடந்து வருகிறது. கோவில் வளாகத்தில் உள்ள அனைத்து கோபுரங்களுக்கும் வர்ணங்கள் பூசுவது, தேர் திருவிழாவையொட்டி ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர், ஞானபிரசுனாம்பிகை தாயாரின் தேர்களை பழுது பார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. மகாசிவராத்திரியன்று பக்தர்கள் எந்த வித இடையூறும் இன்றி சாமி தரிசனம் செய்திட கோவிலுக்குள் கூடுதல் வசதிகளை செய்து வருகின்றனர்.

கொரோனா தொற்று அதிகமாக இருந்து வந்த நிலையில் நான்கு மாட வீதிகளில் சாமி வீதி உலா நடப்பது கேள்வி குறியாக இருந்தது. எனவே, கோவில் அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் கடந்த சில நாட்களாக ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்த நிலையில் உற்சவ மூர்த்திகளை 4 மாட வீதிகளில் ஊர்வலம் நடத்த அனுமதி அளித்ததால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அதன்படி, வருகிற 28-ந் தேதி அரசு சார்பில் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரருக்கு பட்டு வஸ்திரங்களை சமர்ப்பிக்க உள்ளனர். மேலும் மகா சிவராத்திரி பிரம்மோற்சவத்தையொட்டி கோவில் அருகில் உள்ள கலை அரங்கத்தில் கலை நிகழ்ச்சிகள் நடத்தவும் ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.

மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா எப்படி உருவானது?

அமிர்தத்துக்காக பாற்கடலை தேவர்கள் மற்றும் அசுரர்களால் கடையப்பட்டபோது, ‘ஆலகாலம்’ என்ற வி‌ஷம் உருவானது. ஆனால், அதை ஏற்க யாரும் முன்வராத சமயத்தில் மற்றவர்களின் வேண்டுதலின் பேரில் சிவபெருமான் ஆலகால வி‌ஷத்தை குடித்தார். அதனை தன்னுடைய கழுத்தில் வைத்துக் கொண்டார். அந்த வி‌ஷத்தின் தீவிரத்தால் சிவன் ஆழ்ந்த தூக்கத்துக்குள்ளானார். ஆனால், தூங்கினால் வி‌ஷத்தின் பிரபாவம் அதிகமாகும் என்று யோசித்த தேவர்கள், அசுரர்கள், காந்தவர்கள், முனிவர்கள் இரவில் கண் விழித்து உற்சவங்கள் நடத்தினர். அதையே மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா என்று அழைக்கப்படுகிறது.