Asianet News TamilAsianet News Tamil

தாத்தாவுக்கு அடித்த அதிர்ஷ்டம்..! பேத்திக்கு வாங்கிய ஒரே பிஸ்கெட்டில் ஒளிந்திருந்த 2300 கோடி ..!

பேத்தியின் அதிர்ஷ்ட எண்ணை எண்ணை அடிப்படையாக வைத்து லாட்டரி சீட்டு வாங்கும் பழக்கம் கொண்ட வட கரோலினா மாகாணத்தை சேர்ந்த சார்லஸ் டபிள்யூ ஜாக்சனுக்கு அடித்தது அதிர்ஷ்டம்.
 

luckily a old man got 2300 crores in lottery
Author
Chennai, First Published Jun 8, 2019, 3:06 PM IST

தாத்தாவுக்கு அடித்த அதிர்ஷ்டம்..! பேத்திக்கு வாங்கிய ஒரே பிஸ்கெட்டில் ஒளிந்திருந்த 2300 கோடி ..!

இவர் வியட்நாமில் உள்ள ஒரு உணவகத்தில் தன்னுடைய மனைவியுடன் சென்று உணவருந்தியுள்ளார். அப்போது ஃபார்ச்சூன் குக்கீஸ் பிஸ்கெட் பாக்கெட்டில், உள்ள எண்ணை பயனப்டுத்தி பாருங்கள்.. உங்களுக்கு அதிர்ஷ்டம் வந்தடையும் என வித்தியாசமான அறிவிப்புடன் விற்கப்பட்டு வந்துள்ளது.

luckily a old man got 2300 crores in lottery

உடனே தன்னுடைய பேத்திக்காக பார்ச்சூன் குக்கீஸ் பிஸ்கெட் வாங்கியுள்ளார். அதில் உட்புறமாக இருந்த எண்ணை அடிப்படையாக வைத்து லாட்டரி சீட்டு வாங்கி உள்ளார். பின்னர் நடந்த குலுக்கலில் எதிர்பாராதவிதமாக ஆச்சரியமூட்டும் வகையில் 344.6 மில்லியன் டாலர் கிடைத்திருக்கிறது. 

இந்திய மதிப்பில் சொல்ல வேண்டுமென்றால் 2385 கோடி ரூபாய் பரிசாக கிடைத்துள்ளது. மிகுந்த மகிழ்ச்சிக்கு உள்ளான இவர்,லாட்டரியில் கிடைத்த பணத்தில் ராணுவ மருத்துவமனை மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு தலா 10 லட்சம் வீதம் பரிசாக வழங்குவதாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எப்போதுமே நம் நம்பிக்கை வீண் ஆகாது என பேச்சுவழக்கில் கேட்டிருப்போம். அந்த வகையில் தற்போது இவருடைய நம்பிக்கை வீண்போகாமல் அவருக்கு லாட்டரி மூலம் அதிர்ஷ்டம் வந்து சேர்ந்திருக்கிறது என்று அனைவரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios