luckiest person did suicide due to missed lottery ticket
அடித்தது ஜாக்பாட் பரிசு ரூ.8 கோடியே 50 லட்சம்...! ஆனால் அதிர்ஷ்டசாலிக்கு நேர்ந்த கொடுமை..!
தாய்லாந்தில் ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர் ஜிராவத் பாங்பான் என்பவருக்கு ஜாக்பாட் பரிசு ரூ.8 கோடியே 50 லட்சம் விழுந்தது.
42 வயதான இவர், ஒரே குஷியாக வீட்டிற்கு ஓடி வந்து, டிக்கெட் எடுக்க வந்துள்ளார். ஆனால் அந்த டிக்கெட் கிடைக்கவில்லை.
வீடு முழுக்க தேடி பார்த்தும் கிடைக்காததால்,விரக்தி அடைந்த அவர், தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.மேலும், இது குறித்த அனைத்து விவரத்தையும் ஒரு கடிதத்தில் எழுதி வைத்துவிட்டு இறந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் அந்த லாற்றை சீட்டை வேறு யாராவது திருடி சென்றுள்ளனரா? அல்லது வேறு எங்காவது உள்ளதா என இதுவரை தெரியவில்லை.
அதே சமயத்தில் இந்த பணத்திற்கு இதுவரை யாரும் உரிமை கோரி முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.பணம் இல்லாமல் கூட இதுவரை நிம்மதியாக வாழ்ந்து வந்தார். இந்த நபருக்கு இப்படி அதிஷ்டம் அடித்தும் துரதர்ஷ்டமாக மாறியது.
