பரபரப்பான அரசியல் சூழலில், இன்றைய தினம் இளைஞர்களுக்கு மிக முக்கிய தினம் என்பதை பலரும் மறந்து இருப்போம். ஆனாலும் மறக்க முடியாத அளவுக்கு, இன்றைய தினத்தில் ஒரு அற்புதம் உள்ளது.
143 :
பிப்ரவரி 14, அதாவது இன்று காதலர் தினம் . அதற்கான சிம்பல் 143 அதாவது காதலுக்கு கோட் வொர்ட். இன்று உலகமே 143 என்ற எண்ணை சொல்லி , தன் காதலை வெளிப்படுத்தும் நாள் இன்றே . அதே வேளையில், 143 கு, அடுத்த எண் 144 என்பது குறிப்பிடத்தக்கது.
144 :
144 என்றால் நமக்கு தெரிந்த ஒன்று, 144 தடை உத்தரவு. தமிழகத்தில் நிகழும் அசாதாரண சூழல் காரணமாக , கூவத்தூரில் தற்போது 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதாவது 143 என்ற காதலர் தின நம்பரும் , 144 என்ற தடை உத்தரவும் ஒரே நாளில் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
