lives jeans sale in 67 laksh

பழமையான பொருட்களை வாங்குவதில் தற்போது பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் 125 ஆண்டுகள் பழமையான லிவிஸ் ஜீன்ஸ், ஒன்றை இந்திய மதிப்பின் படி 67 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளார்.

1800 ஆம் ஆண்டுகளில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் டிரெண்டிங்கில் இருந்து இந்த விண்டெஜ் ஜீன்ஸ் பேண்ட்டுகள், தற்போது இருக்கும் ஜீன்ஸ் பேண்ட்டுகளை காட்டிலும் நிறைய வேறுபாடுகள் கொண்டவை. குறிப்பாக இந்த பேண்ட்களில் பின்பக்கம் ஒரேஒரு பாக்கெட் தான் இருக்கும். பெல்ட் அணிவதற்கான பட்டைகள் இருக்காது.

கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த ஏலத்தில் இந்த பழமையான ஜீன்ஸ் பேண்ட் விலை போகவில்லை. தற்போது, ஆசியாவை சேர்ந்த ஒருவர், ஒரு ஜோடி லிவிஸ் விண்டேஜ் ஜீன்ஸ் பேண்ட்டை, சுமார் ஒரு லட்சம் அமெரிக்க டாலருக்கு வாங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.