எலுமிச்சை குடும்பத்தை சேர்ந்த மற்றொரு பழமான கொலுமிச்சையும் பல நன்மைகளை வழங்குகிறது. இது ஆயுர்வேதத்தில் பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது.

வாய் ஆரோக்கியம்

கொலுமிச்சை இலைகளை ஈறுகளில் தேய்ப்பது வாய் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். உணவு முறைகளால் வாயில் ஏற்படும் பாக்டீரியா தொற்றுக்களை நீக்குகிறது.

வீக்கத்தை கட்டுப்படுத்தும்

கொலுமிச்சையின் இலைகள் மற்றும் எண்ணெய் அனைத்து வலிகள் மற்றும் அசௌகரியங்களில் இருந்து நிவாரணம் அளிக்கும், ஒற்றை தலைவலி போன்ற பல நோய்களை குணப்படுத்த உதவும்.

பூச்சிக்கடிகள்

பூச்சிக்கடிகளை குணப்படுத்த கொலுமிச்சை பயன்படுகிறது. இதில் உள்ள சிட்ரோனெல்லோல் மற்றும் லிமோனைன் கலவைகள் எரிச்சல்களை சரிசெய்ய உதவுகிறது.

சரும ஆரோக்கியம்

கொலுமிச்சை சாறில் உள்ள அமிலங்கள் உடலில் நச்சுப்பொருட்களை குறைத்து செல்கள் சிதைவடைவதை தடுப்பதன்மூலம் சரும வெடிப்புகள், முகப்பருக்கள் மற்றும் தடிப்புகளை தடுக்கிறது.

ரத்த சுத்திகரிப்பு

ரத்தம் தொடர்பான வியாதிகள் உள்ளவர்கள் கொலுமிச்சையை பயன்படுத்துவது அவசியம். இதில் உள்ள அமிலக்கலவைகள் இரத்தத்தில் பதோஜன்களை வெளியேற்றி உடனடி நிவாரணத்தை வழங்குவதுடன் இரத்தத்தையும் சுத்தம் செய்கிறது.

மனஅழுத்தத்தை குறைக்கிறது

நரம்பியல் கோளாறுகள் மற்றும் பதற்றம் போன்ற பிரச்சினைகளை குணப்படுத்த கொலுமிச்சை எண்ணெயை பயன்படுத்தலாம். கொலுமிச்சை எண்ணெயை சுவாசிக்கும் போது அது உடல் மற்றும் மனதை புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது.

நோயெதிர்ப்பு சக்தி

கொலுமிச்சையில் உள்ள ஆன்டிபாக்டீரியல் மற்றும் ஆக்சிஜனேற்ற பண்புகள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். இரைப்பை மற்றும் குடல் நோய்களையும் குணப்படுத்த உதவுகிறது 

செரிமானம்

செரிமானக்கோளாறு மற்றும் மலச்சிக்கலுக்கு கொலுமிச்சை சாறு சிறந்த மருந்து. இது செரிமான மண்டலத்தை சீராக்கும் எதிர் அழற்சி பண்புகள் அனைத்து விதமான இரைப்பை நோய்களில் இருந்தும் பாதுகாக்கிறது. மலக்குடல் புற்றுநோய், மூலநோய் மற்றும் அல்சர் போன்ற நோய்களை குணப்படுத்தவும் பயன்படுகிறது.
  
முடி பராமரிப்பு

கொலுமிச்சை சாறை தலையில் தேய்ப்பது முடி உதிர்வை தடுக்கும். மேலும் கூந்தலின் நுனிகளை பலப்படுத்த உதவுகிறது. மேலும் இது சருமத்தை ஈரப்பதமாக்கவும் பொடுகை விரட்டவும் பயன்படுகிறது.