40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மிக அற்புத நிகழ்வான அத்தி வரதர் வைபவம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.

கடந்த 46 நாட்களில் இதுவரை ஒரு கோடியே 4 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்து உள்ளனர். நிறைவு நாளான இன்று அத்தி வரதரை காண்பதற்காக தொடர்ந்து 6 மணி நேரமாக நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர் பக்தர்கள்.

இது ஒரு பக்கம் இருக்க.. மற்றொரு பக்கம் இன்று மாலை 4 மணிக்கு மேல் கோவில் வளாகத்திற்குள் இருப்பவர்களை மட்டுமே சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். மற்றவர்கள் அதாவது 4 மணி அளவில் கோவிலுக்கு வெளியில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்களால் அத்தி வரதரை தரிசிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகம விதிப்படி 48 ஆவது நாளான நாளை அத்தி வரதரை அமிர்தசரஸ் குளத்தில் வைப்பதற்கான சிறப்பு ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதற்காக ஒரு சில சிறப்பு பூஜைகள் செய்து அத்தி வரதரை குளத்தில் வைக்கப்படுவார். மீண்டும் அத்தி வரதர் வைபவம் 40 ஆண்டு கழித்து 2059 ஆம் ஆண்டு நடைபெ.றும் என்பது குறிப்பிடத்தக்கது