கண்ணுக்கு தெரியாத எத்தனையோ பேர் பல்வேறு நபருக்கு உதவி செய்து வருகின்றனர். அவ்வாறு உதவி கரம் நீட்டும் மனிதர்களை பார்ப்பதே அபூர்வம் தான். அந்த வகையில் தற்போது மதுரையில் பணியாற்றும் பெண் ஆய்வாளர் ஒருவர் கஞ்சா விற்று வந்த ஒரு நபருக்கு நல்ல வாழ்க்கை அமைத்து கொடுத்து உள்ளார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்....

இது குறித்த பதிவை தமிழ்நாடு போலீஸ் முகநூல் பக்கத்தில் பதிவிட்டு பெண் காவல் ஆய்வாளருக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

அதில், 

கஞ்சா வியாபாரியின் வாழ்க்கையை மாற்றிய பெண் காவல் ஆய்வாளர்

மதுரை மாநகர் திலகர் திடல் காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வந்த நபரை திருத்தும் முயற்சியிலும் அவருக்கு வேறு தொழில் ஏற்படுத்திக் கொடுக்கவும் பெண் காவல் ஆய்வாளர் திருமதி.பிளவர் ஷீலா அவர்கள் முடிவு செய்தார்.

அதன்பேரில் அவருக்கு உப்பு வியாபாரம் செய்ய சைக்கிளையும் அதற்கு தேவையான உபகரணங்களையும் வாங்கிக் கொடுத்து வாழ்க்கை பாதையை நல்வழியில் பயணம் செய்ய வழிவகை செய்து கொடுத்தார். பெண் காவல் ஆய்வாளரின் மனிதாபிமான செயலை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினார்கள்.