ladies will not obey the gents when you know ?

ஆண்களை பெண்கள் எப்போதுமே மதித்து வாழ்பவர்கள் தான் பெண்கள்....

ஆனால் நாம் பெண்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுக்க தவறும் போது, பெண்களும் ஆண்களை மதிப்பதில் சற்று மாற்றம் வர தான் செய்யும்.....

அந்த பெண் உங்கள் மனைவியாக இருக்கலாம்,உங்கள் சகோதரியாக இருக்கலாம், உங்கள் தோழியாக இருக்கலாம் அல்லது காதலியாக கூட இருக்கலாம்....

ஆனால் பெண்கள் மிகவும் மதிக்கப்பட வேண்டியவர்கள்....

வயது வித்தியாசம் இருந்தாலும், பெண்களை எப்போதும் நாம் மதித்து வாழ வேண்டும் .....

ஆண்கள் தவறு செய்வது எங்கு தெரியுமா ?

மனைவியை விட்டு கொடுத்து பேசுவது ......

தீய சொற்களை பேசுவது...

சம்மந்தமே இல்லாமல் வேறு ஒரு ஆணுடன் ஒப்பிட்டு தவறாக பேசுவது .....

தே... ஆரம்பிக்கும் கடின தகாத வார்த்தையை ஒரு ஆண் ஒரு பெண்ணிடம் பயன்படுத்திவிட்டால், அந்த ஆணின் அனைத்து மதிப்பும் ஒரே வார்த்தையில் இழந்து விடுவார் என்பதே....

ஒரு பெண்ணை எந்த வார்த்தையால் திட்ட கூடாதோ அந்த வார்த்தையை ஒரு ஆண் பயன்படுத்திவிட்டால்,அவர்களே புரிந்துகொள்ளலாம், இனி அந்த பெண்ணின் மனதில் இருந்து பல அடி கீழே இறங்கி விட்டீர்கள் என ....

அதுமட்டும் அல்ல. பிறந்த வீட்டிலிருந்து புகுந்த வீட்டிற்கு வந்து பாடுபட்டு குடும்ப சுமையை தாங்கி செல்லும் ஒவ்வொரு பெண்ணும் மாமனிதி என்றே கூறலாம் ...

ஆனால் ஆணோ இதை பற்றி எல்லாம் கவலை படாமல், அகங்காரமாக பேசி ஒரு பெண்ணை இழிவு படுத்துவதும்,தன்னை விட அதிகமாக சம்பாதிக்கிறாள் என்று பொய்கூற்று பேசி,அவள் மனதை புண்பட செய்வதுமாக ஒரு ஆண் திகழ கூடாது என்பதே ... எந்த ஒரு பெண்ணும் நினைப்பாள்......

இதனுடைய அடுத்த பதில் மேலும் பல விவரங்களை பார்க்கலாம் ....