lab assistant result may release asap

ஆய்வக உதவியாளர் தேர்வு முடிவுக்காக காத்திருக்கிறீர்களா...? சந்தோஷமான செய்தி....

அரசு உயர்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள, சுமார் 4000 பணியிடங்களை நிரப்புவதற்காக 2015-ம் ஆண்டு மே மாதம் தேர்வு நடைப்பெற்றது.

இந்த தேர்வை எழுதுவதற்காக 8 லட்சத்திற்கு மேற்ப்பட்டோர் ஆர்வமுடன் விண்ணப்பித்து தேர்வினை எழுதினர். பின்னர் இவர்களுக்காக நேர்முகத்தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் ஒருவர் பொதுநல வழக்கு தொடரப்பட்டது .

இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது , நேர்முகத்தேர்வு தேவை இல்லை எனவும், எழுத்துத்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் வெயிட்டேஜ் மற்றும் நேர்காணல் மதிப்பெண்ணை மொத்தமாக கணக்கிட்டு தேர்வு முடிவுகளை அறிவிக்கலாம் என 2015-ம் ஆண்டு ஆகட்ஸ் 7-ம் தேதி நீதிபதி உத்தரவிட்டார்

 இதனை தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளாக வெளியிடாமல் இருந்த, தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும் என கவல் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .

இந்த தேர்வை எழுதி முடிவுகளுக்காக காத்திருப்பவர்களுக்கு இது ஒரு மகிழ்வான செய்தியாக இருக்கும்